
நடிகை சுஜா வருணி நேற்று ஒரு காயின் தூக்கிபோட்டு சிறு குழந்தைகள் விளையாடுவது போல விளையாட்டு தனமாகமே தலை வேண்டுமா வால் வேண்டுமா என கேட்டு சினேகனிடம் விளையாடினார். அதில் சினேகன் தோற்றபோதெல்லாம் சில சீரியசான கேள்விகளை, சினேகனிடம் எழுப்பினார்.
முதலில் தோற்றபோது,இந்த வீட்டில் எல்லாம் சரியாக உள்ளது என நீங்கள் நினைக்கிறீர்களா? என கேள்வி கேட்டார். அதற்கு சினேகன் வீடு நன்றாகத்தான் உள்ளது ஆனால் மற்றவை மாற்றிவிட்டது என கூறினார். உடனே சுஜா மற்றவை என்றால் எதை குறிப்பிடுகிறீர்கள் என கேட்டார். அதற்கு சினேகன் பொருட்கள் பற்றி கூறுவதாக சமாளித்தார்.
அடுத்தமுறை தோற்றபோது, இந்த வீட்டில் உள்ள அனைவராலும் நாமினேட் செய்யப்பட்டு, மக்களாலும் காப்பாற்ற படாமல் வெளியேற்றப்பட்டனர் ஜூலி. இவர் தற்போது மீண்டும் இங்கு வந்திருக்கிறார் இது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்க. அதற்கு சினேகன், இங்கு இருந்த ஜூலி இப்போது மாறி வந்திருக்கிறார் என கூறினார் . எப்படி மாறியிருக்கிறார் என சுஜா சினேகனை துருவி துருவி கேள்விகள் கேட்டும் கூட அதனை கூற மறுத்துவிட்டார் சினேகன்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.