கமல் – விஜய் இணையும் புதிய திரைப்படம்! பிரம்மாண்டமாக கதையை உருவாக்கும் இளம் இயக்குனர்!

 
Published : Jul 05, 2018, 01:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:37 AM IST
கமல் – விஜய் இணையும் புதிய திரைப்படம்! பிரம்மாண்டமாக கதையை உருவாக்கும் இளம் இயக்குனர்!

சுருக்கம்

Kamal Vijay combo movie is young director dream project

உலக நாயகன் கமல் மற்றும் இளையதளபதி விஜய் ஆகியோரை வைத்து பிரம்மாண்டமான திரைப்படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் இளம் இயக்குனர் ஈடுபட்டுள்ளார்.    கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா பாடலை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த பாடலை எழுதியதுடன் அவரது கனீர் குரலில் பாடி அசத்தியிருப்பார் அருண் ராஜா காமராஜ். நெருப்புடா பாடலுக்கு பிறகு அருண்ராஜா மிகவும் பிரபலம் ஆனால். அதுமட்டும் இல்லாமல் விஜயின் பைரவா படத்திலும் இவர் எழுதிய பாடல் வரவேற்பை பெற்றது. மேலும் விஜயின் தெறி படத்திலும் அருண்ராஜா காமராஜா பாடல் எழுதியுள்ளார்.பாடல் எழுதுபவராகவும், பாடுபவராகவும் இருந்த அருண்ராஜா ஏற்கனவே இயக்குனர் அவதாரம் எடுத்துவிட்டார். சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான இவர் தற்போது கனா எனும் படத்தை இயக்கி முடித்துள்ளார். தனது நண்பன் அருண்ராஜாவுக்காக கனா படத்தை சிவகார்த்திகேயனே தயாரித்துள்ளார்.   கனா படத்தில் சத்தியராஜும், ஐஸ்வர்யா ராஜேசும் நடித்துள்ளனர்.   இந்த படத்தின் போஸ்ட் புரடக்சன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் கனா படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை அருண்ராஜா துவக்கியுள்ளார்.   இந்த படம் டபுள் ஹீரோ சப்ஜெக்ட். தமிழில் அதிகம் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் வருவதில்லை. அப்படியே வந்தாலும் புதுமுகங்கள் அல்லது மலையாள, தெலுங்கு நடிகர்களை கொண்டே படங்களை இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர்.  

 ஆனால் அருண் ராஜா புதிய முயற்சி ஒன்றை துவங்கியுள்ளார். அந்த முயற்சி இந்திய அளவில் பிரமாண்டமான ஒரு முயற்சியாக கருதப்படுகிறது. காரணம் தனது டபுள் ஹீரோ சப்ஜெக்டில் கமல் – விஜய் ஆகியோரை நடிக்க வைக்க அருண்ராஜா முயற்சி மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே விஜயுடன் நல்ல பழக்கம் வைத்துள்ள அருண்ராஜா, தனது டபுள் ஹீரோ சப்ஜெக்டை விஜயிடம் கூறியுள்ளார். படத்தின் ஒன்லைன் கதையை ஏற்கனவே விஜயிடம் அருண்ராஜா கூற கதையை டெவலப் செய்யுமாறு பதில் கிடைத்துள்ளது. இதனால் உற்சாகத்துடன் கதையை அருண்ராஜா டெவலப் செய்து வருகிறது. இது குறித்து அருண்ராஜாவிடம் கேட்ட போது, விஜய் தனக்கு ஏற்கனவே நன்றாக தெரியும் எனவே அவரை ஈஸியாக அப்ரோச் செய்துவிட்டேன், ஆனால் கமல் சாரை இதுவரை நான் சந்தித்ததே இல்லை. விரைவில் அவரையும் சந்திக்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.  இந்த நிலையில் கமல்ஹாசனையும் சந்தித்து விரைவில் அருண்ராஜா கதையை கூற உள்ளாராம். எல்லாம் நினைத்தபடி நடந்தால் விஜய் – கமல் இணைந்து நடிக்கும் பட அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு இருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?