
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வெளிப்படையான பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர் இளம் நடிகர் மஹத்.
இந்நிலையில் இவர் இந்த வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள யாஷிகா மீது காட்டும் பாசம் சற்று அத்துமீறி உள்ளது பார்ப்பவர்களையே முகம் சுழிக்க வைத்துள்ளது.
இன்று வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில்... மும்தாஜ் 'இனி பாத்திரம் கழுவும் குழுவினர் யாருடைய கப்புகளை கழுவ மாட்டார்கள்' என கூறுகிறார்.
இதற்கு ரித்விகா மிகவும் கோபமாக, மும்தாஜ் உங்களுக்கு நன்றாக தெரியும் முதல் வாரம் எல்லோருடைய கப்புகளையும் நான் கழுவினேன் என கூறுகிறார். பின் மும்தாஜ் இப்போ என்ன நினைக்கிறீர்கள் ரித்து என கோபமாக குரலை உயர்த்துகிறார்.
பின் டானியல் பேசுவது காட்டப்படுகிறது அதில் 'நீ தேவை இல்லாமல் வாயை விடாதே' என கூறுகிறார். இதைதொடர்ந்து பேசும் மும்தாஜ் சாப்பாடு சரியாக கிடைத்தால் இன்னும் 10 வேலைகள் கூட அதிகமாக செய்து தருவோம் என்று கூறுகிறார்.
அடுத்ததாக பேசும் டானியல், 'சீ பாத்திரங்களை இங்கே எடுத்து வந்து வைக்க வேண்டும் என யாரவது சொன்னார்களா...? இருப்பதிலேயே ரொம்ப ஸ்மார்ட்ன்னு நினைப்பு என திட்டுகிறார்.. பின் சில வாக்கு வாதம் மற்றும் பிரச்சனைகள் அங்கு வெடிக்கிறது.
இந்த பிரச்சனைகள் பற்றி எந்த கவலையும் இல்லாமல், யாஷிகாவை இறுக்கமாக கட்டிபிடித்து கொண்டு இருக்கிறார் மஹத்... இதை பார்த்து டென்ஷன் ஆன பாலாஜி இவர்கள் இருவரையும் பார்த்து காரி துப்புவது போல் இந்த ப்ரோமோவில் உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.