’தமிழர்கள் மொழிக்காகப் போராடத்துவங்கினால் இந்தியா தாங்காது’...அமித் ஷாவுக்கு ரெட் அலர்ட் கொடுக்கும் கமலின் வீடியோ...

By Muthurama LingamFirst Published Sep 16, 2019, 1:09 PM IST
Highlights

’பல ராஜாக்கள் தங்கள் ராஜ்ஜியங்களை விட்டுக்கொடுத்ததால் உருவானதுதான் இந்தியா. ஆனால் அந்த ராஜாக்கள் தங்கள் மொழியையோ கலாச்சாரத்தையோ ஒருபோதும் விட்டுக்கொடுக்க முன்வந்ததில்லை’என்பதை இந்தி மொழியைத் திணிக்க விரும்பும் அமித் ஷாக்கள் புரிந்துகொள்ளவேண்டும்’ என்று ஒரு காணொளி மூலம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்.

தேர்தல் நேரத்தில் அடிக்கடி வீடியோக்கள் வெளியிட்டு பல டிவிக்களை உடைத்து வந்த கமல் சமீபகாலமாக ட்விட்டர் செய்திகளோடு நிறுத்திக்கொண்டார். இந்நிலையில் இன்று அமித்ஷாவின் ‘ஒரே நாடு, ஒரே ரேசன், ஒரேமொழி சர்ச்சைக்கு கொந்தளிப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு மத்திய அரசை பலமாக எச்சரித்துள்ளார் கமல். கூடவே அனுப்பியுள்ள செய்தி ஒன்றில்,...இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிருபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். புதிய திட்டங்களோ  சட்டங்களோ இயற்றப்படும் பொழுது அது மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். வெள்ளையனை வெளியேற்றியது வெற்று நாயகத்திற்காக அல்ல ஜனநாயகத்திற்காக...என்றும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர்.

1950ல் குடியரசு ஆனபோது மாநில மொழி, கலாச்சாரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது என்கிற சத்தியத்தை மக்களுக்கு செய்தது அந்த சத்தியத்தை திடீரென்று ஒரு ஷாவோ சுல்தானோ சாம்ராட்டோ மாற்றிவிட முயற்சிக்கக்கூடாது என்று ... ஓடும் கமலின் காரசாரமான பேச்சு வீடியோ இதோ...

இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிருபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.

புதிய திட்டங்களோ
சட்டங்களோ இயற்றப்படும் பொழுது அது மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.

வெள்ளையனை வெளியேற்றியது வெற்று நாயகத்திற்காக அல்ல ஜனநாயகத்திற்காக. pic.twitter.com/xH6c0ANvQh

— Kamal Haasan (@ikamalhaasan)

click me!