
‘ஒரு நடிகை திருமணம் முடிந்த பிறகு கணவனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சேவை செய்யும் அடிமையாக மாறிவிடவேண்டும் என்று ஒட்டுமொத்த சமூகமும் எதிர்பார்க்கிறது. நான் ஆர்யாவைத் திருமணம் செய்த பிறகு என் முன்னால் மைக்கை நீட்டும் அத்தனை பேரும் நீங்கள் தொடர்ந்து நடிக்கப்போகிறீர்களா என்று ஆச்சர்யக்குறியுடனேயே கேள்வி கேட்கிறார்கள்’என்று கொந்தளிக்கிறார் நடிகை ஆயிஷா.
திருமணத்துக்குப் பின் கணவன், மனைவி இரு வேறு துருவங்களாக நடித்துள்ள ‘காப்பான்’இன்னும் நான்கே தினங்களில் வரும் வெள்ளியன்று ரிலீஸாக உள்ள நிலையில், அப்பட புரமோஷனுக்காக பத்திரிகையாளர்களுக்குத் தொடர்ந்து பேட்டி அளித்து வரும் ஆயிஷா, பெரும்பாலானவர்கள் தான் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதை ஆச்சர்யமாகப் பார்ப்பதை நினைத்து கவலை அடைந்துள்ளார். ‘நான் வயதில் மிகவும் சின்னப்பெண். சினிமாவில் நான் சாதிக்க வேண்டியவைகள் எவ்வளவோ உள்ளன. இந்நிலையில் என்னை நோக்கி மைக்கை நீட்டும் அத்தனை பேரும் தொடர்ந்து நடிப்பது குறித்து ஆச்சர்யம் கொள்வது கவலை அளிக்கிறது. பெண்கள் திருமணமாகிவிட்டால் கணவனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பணிவிடை செய்து வீட்டிலேயே முடங்கிக்கிடக்கவேண்டும் என்று நினைக்கும் மனோபாவம் மாறவேண்டும்’என்கிறார் ஆயிஷா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.