பார்த்திபனின் ‘ஒத்தச்செருப்பு’...ரிலீஸுக்கு முன்பே பிரபல இயக்குநர் எழுதிய விமர்சனம்...

By Muthurama LingamFirst Published Sep 16, 2019, 10:30 AM IST
Highlights

பரிட்சார்த்த முறையில் தான் மட்டுமே நடித்து இயக்கியுள்ள பார்த்திபனின் ‘ஒத்தச்செருப்பு’படம் வரும் 20ம் தேதி வெள்ளியன்று ரிலீஸாகவுள்ள நிலையில், அப்படத்தை முன்கூட்டியே பிரிவியூ தியேட்டரில் பார்த்த இயக்குநர் வசந்தபாலன் ’பல உயரிய விருதுகள் உங்கள் வாசல் தேடி வரட்டும் சார்’ என்று தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.

பரிட்சார்த்த முறையில் தான் மட்டுமே நடித்து இயக்கியுள்ள பார்த்திபனின் ‘ஒத்தச்செருப்பு’படம் வரும் 20ம் தேதி வெள்ளியன்று ரிலீஸாகவுள்ள நிலையில், அப்படத்தை முன்கூட்டியே பிரிவியூ தியேட்டரில் பார்த்த இயக்குநர் வசந்தபாலன் ’பல உயரிய விருதுகள் உங்கள் வாசல் தேடி வரட்டும் சார்’ என்று தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.

படம் முழுக்க ஒரு நபர் மட்டுமே நடித்த படங்கள் மிக அபூர்வமாகவே உருவாக்கப்பட்டுள்ளன எனும் நிலையில் தமிழில் ‘ஒத்த்ச்செருப்பு’மூலம் அம்முயற்சியில் முதல்முறையாக இறங்கியுள்ளார் பார்த்திபன். இப்படத்தை விநியோகஸ்தர்கள் வாங்க மிகவும் தயக்கம் காட்டிய நிலையில் ரஜினி துவங்கி இந்தி நட்சத்திரங்கள் அனைவருக்கும் பிரிவியூ காட்டி அவர்களது வாழ்த்துகளை விளம்பரங்களுக்குப் பயன்படுத்தி வருகிறார். அப்படி வாழ்த்தும் அனைவருமே விருதுகளுக்கு உத்தரவாதம் தருகிறார்களே தவிர படம் கமர்சியல் வெற்றிபெறும் என்று சர்ட்பிகேட் தரத் துணியவில்லை.

இந்நிலையில் தனது முகநூல் பக்கத்தில் விமர்சனம் போல ஒன்றை எழுதியுள்ள இயக்குநர் வசந்தபாலன்,...சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் ரா.பார்த்திபன் சாரின் அழைப்பின் பேரில் ஒத்த செருப்பு திரைப்படத்தை கண்டேன். ஒருவரை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதுவது மற்றும் இயக்குவது மிக பெரிய சவால். அதை உலகமெங்கும் பல்வேறு திரைஆளுமைகள் சாதித்து காட்டியுள்ளனர்.

பார்த்திபன் சார் இதை எவ்வாறு கையாண்டுள்ளார் என்று எதிர்பார்ப்பு.படவெளியீடு அறிவிப்பு வந்த நாளில் இருந்தே எனக்குள் ஒரு படைப்பாளியாய் அணையாமல் எரிந்து கொண்டிருந்தது.
ஆகவே அதிக ஆர்வத்துடன் படத்தை பார்த்தேன். ஒளி,ஒலி,எடிட்டிங்,இசை,வசனம்,மேக்கப் இப்படி பல தொழிற்நுட்பங்களை மிக நுட்பமாக கையாண்ட திரைப்படமாக இந்த திரைப்படத்தை நான் உணர்ந்தேன். ஆழமான விசாரணைகளை,கேள்விகளை நமக்குள் உருவாக்குகிற திரைப்படமாக படம் விரிகிறது.

சமகால அரசியலை, நடுத்தர வர்க்கனின் அன்றாட வாழ்க்கையை பார்த்திபன் சாருக்கே உண்டான நையாண்டியுடன் படம் நெடுக வசனங்களை எழுதியுள்ளார் பேசியுள்ளார்.
பார்த்திபன் சாரின் வசன அமைப்பு ஒரு கத்திக்குள் ஒரு குறும் கத்தி அதற்குள் இன்னொரு சிறிய கத்தி அதற்குள் இன்னும் ஒரு சின்னஞ்சிறிய கத்தியும் மயிலிறகுயும் இருக்கும். மிக கவனமாக படத்தை பார்க்கையில் கதையின் பல்வேறு படிமங்கள் வசனங்களில் உறைந்து கிடப்பதைக் காணலாம்.பரீட்சார்த்த முயற்சிகள் எந்தவொரு துறைக்கும் அவசியமானது. அப்படி இந்த திரைப்படம் தமிழ்த்திரைப்படங்களில் ஒரு பெரிய முன்னெடுப்பு. வாழ்த்துகள் பார்த்திபன் சார்.பல உயரிய விருதுகள் உங்கள் வாசல் வரட்டும்’ என்று எழுதியிருக்கிறார்.

click me!