
சென்னை கேளம்பாக்கத்தில் நடிகர் கமல் ரசிகர்களுடன் பேச்சு நடத்தினார் அதில் அவருடைய அரசியல் பயணம் குறித்து பல கருத்துக்களை முன் வைத்து உள்ளார்.
ரசிகர் கூட்டத்தில் கமல் பேசியது
தான் “வள்ளல் கூட்டத்தை” உருவாக்க முயன்று வருகின்றேன் என தெரிவித்து உள்ளார்
37 ஆண்டுகளாக தாம் இயங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.ஆர்வ கோளாரில் நான் பதவிக்காக வந்துவிட்டேன் என யாரும் நினைக்க வேண்டாம்....வர வேண்டிய சூழல் தற்போது உருவாகி உள்ளது
திருட்டுதனம் செய்பவர்கள் பெரியவர்கள் போல் நடந்துக்கொள்வதை பார்த்து தாங்க முடியவில்லை....
கடந்த மழையில் பணக்காரர்கள் கூட வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் தவித்து வந்தனர்.....எந்த வசதியும் இல்லாத பாமர மக்கள் இந்த மழையில் எப்படி சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள் என நினைத்து பாருங்கள்...
சிறு வியாபாரிகள், கூலி வேலை செய்பவர்கள் கூட நன்கொடை செய்கிறார்கள் ...
கொற்கையில் சுனாமி வந்ததால் தான், பாண்டியன் நகர் மதுரைக்கு சென்றது.... வரலாற்றை திருப்பி பார்க்காமல்,செய்த தவறையே மீண்டும் செய்ய கூடாது எனவும் கமல் பேசி உள்ளார்
மழை வந்தால் ஏழைக்கும் ஒன்றும் தான் பணகாரர்களுக்கும் ஒன்றுதான் என்றும் தெரிவித்தார்
அழிவு வரும் வரை நாம் காத்திருக்க தேவை இல்லை, வருமுன் காப்பது தான் சிறந்தது ,...இன்று முதலே நாம் அதற்கான முயற்சியை செய்ய வேண்டும்....
இவ்வாறு கமல் தன் ரசிகர்களிடம் பேசினார்.....
.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.