
நடிகர் கமலஹாசன் ஆர்வார்பேட்டையில் உள்ள அவரது பிரைவேட் தியேட்டரில் விஜய் மற்றும் அட்லியுடன் மெர்சல் திரைப்படத்தைப் பார்த்து ரசித்தார். தொடர்ந்து படத்தை பாராட்டினார்..
பல்வேறு தடைகள் தாண்டி தீபாவளியன்று வெளியான மெர்சல் திரைப்படம், வசூலில் சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்நிலையில், படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்களுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பான காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்..
ஆனால் அரசியல்வாதிகள், திரையுலகினர் உள்ளிட்டோர் மெர்சல் படத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்து மெர்சல் படத்துக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருந்தார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தனர்.
இந்தப் பிரச்சனைக் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த கமல், மெர்சல் படம் ஏற்கனவே தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் மறு தணிக்கை செய்ய வேண்டாம் என மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் கமலஹாசனுக்கு அவரது ஆழ்வார்பேட்டை வீட்டில் உள்ள பிரைவெட் தியேட்டரில் மெர்சல் படம் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த கமல் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். இந்த திரையிடலின் போது விஜய், அட்லி, தேனாண்டாள் பிலிம்ஸின் முரளி, ஹேமா ருக்மணி ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.