
முன்னணி நடிகை பட்டியலில் இடம் பிடிக்க போராடிக்கொண்டிருக்கும் வாரிசு நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.
தற்போது இவர் சூர்யாவுடன் தான சேர்ந்த கூட்டம், சண்டக்கோழி 2 , சாமி 2 , மற்றும் நடிகையர் திலகம் ஆகிய படங்களில் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என போராடி வருகிறார்.
இதில் மிகவும் முக்கியமான படமான, நடிகையர் திலகம் சாவித்திரியின் வேடத்தில் நடிப்பது குறித்து இவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்“ சாவித்ரி மேடம் பாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரிய சவாலான விஷயம். இந்த வேடத்துக்கு என்னை தேர்வு செய்த போது, என்னால் அந்த வேடத்தை ஏற்று நடிக்க முடியுமா என மிகவும் பயந்தேன்.
காரணம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சாருக்கு சமமாக நடித்து பெயர் பெற்றவர் சாவித்ரி. அவர் போல நடிப்பது சுலபமான விஷயம் அல்ல.
ஆனால் அவரது மகள் விஜயசாமுண்டீஸ்வரி உள்பட அனைவரும் அளித்த ஆதரவும் , ஊக்கமும் தான் நான் இந்த படத்தில் நடிக்கும் தைரியத்தை கொடுத்தது.
தற்போது அவர் நடித்து சாதனை படைத்த படங்களை நேரம் கிடைக்கும் போது திரும்ப திரும்ப போட்டு பார்த்து வருகிறேன். மேலும் சாவித்ரி வேடத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது என்று கீர்த்தி சுரேஷ் கூறினார் .
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.