மெர்சலை போல் எல்லா படத்திற்கும் பிரச்சனை பண்ணுங்க... கையெடுத்து கும்பிட்ட பிரபல நடிகர்!

 
Published : Oct 22, 2017, 05:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
மெர்சலை போல் எல்லா படத்திற்கும் பிரச்சனை பண்ணுங்க... கையெடுத்து கும்பிட்ட பிரபல நடிகர்!

சுருக்கம்

actor mailsamy request for politicians against all movies

தற்போது வலைத்தளத்தில் அதிகமாக பேசப்பட்டும், பகிரப்பட்டு வருவது மெர்சல் படத்தின் சர்ச்சை தான். பல தொலைக்காட்சிகளிலும் இது குறித்து பெரிய அளவில் விவாதமே நடத்திவிட்டனர். 

படத்திற்கு பல வழியில் அரசியல் வாதிகள், மருத்துவ சங்கங்கள் நெருக்கடி கொடுத்து வந்தாலும் வசூலில் எந்த குறையும் இல்லாமல் திரைப்படம் ஓடி வருவதால் விநியோகஸ்தர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் மயில்சாமி தற்போது அரங்கேறி வரும் மெர்சல் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் நாட்டில் நடப்பவைகள் தான் படமாக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதிக்கப்பட்ட ஒரு விஷயம் தான் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா போன்றவை இந்த கருத்தை விஜய் மெர்சல் படத்தில் கூறியதில் என்ன தவறு உள்ளது?

மேலும் சென்சார் முடிந்த படத்தின் காட்சிகளுக்கு விளக்கம் கேட்பது நியாயம் இல்லை. படம் பிரச்சனை இல்லாமல் ஓடி இருந்தால் கொஞ்சம் பேர் தான் அந்த காட்சியை பார்த்திருப்பார்கள், இப்போது குறிப்பிட்ட காட்சி வாட்ஸ் அப் போன்றவற்றில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை விஜய் தான் நடித்த படங்களிலேயே அதிக ஃபேமஸ் ஆனது இந்த படத்தில்தான். அதனால் அரசியல்வாதிகளே, உங்களை கையெடுத்து கும்பிடுகிறேன், எல்லா படங்களுக்கும் பிரச்சனை தாருங்கள். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் போல் அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் லாபம் அடையும் என்று கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?