
தனது தந்தையின் திரு உருவச் சிலையை பரமக்குடியில் திறந்துவைத்து இன்று இரவுதான் கமல் சென்னை திரும்புகிறார் என்கிற செய்தி கூட அவரது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகம் வந்து காத்திருக்கும் பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் ராஜ்கமல் நிறுவனம் சார்பாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தனது பிறந்த தினத்தன்று பொதுவாகவே ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களைச் சந்திக்கும் கமல் இந்த ஆண்டு தந்தையின் உருவச் சிலை திறப்புக்காக தனது 90 சதவிகித நிகழ்ச்சிகளை சொந்த ஊரான பரமக்குடியில் திட்டமிட்டுக்கொண்டார். ஆனால் அவர் பரமக்குடியில்தான் இருப்பார் என்கிற செய்தி பெரிய அள்வில் சென்று சேராத நிலையில் காலை முதல் அவரது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்துக்கு வாழ்த்துச்சொல்ல வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றதாம்.
இத்தகவல் பரமக்குடியிலிருக்கும் கமலுக்குத் தெரிவிக்கப்பட நான் எத்தனை மணி முதல் சென்னை அலுவலகத்தில் இருப்பேன் என்பதை மீடியாவுக்கு உடனே அறிக்கையாகக் கொடுத்துவிடுங்கள் என்று உத்தரவு பிறப்பிக்கவே சற்றுமுன்னர் அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திலிருந்து ...அன்பு நண்பர்களே இன்று மாலை மதுரையிலிருந்து சென்னை கிளம்பும் கமல் இரவு எட்டு மணி முதல் ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் இருப்பார் என்று அறிவித்துள்ளனர். மீண்டும் நாளை காலை 9 மணிக்கு தனது அலுவலக முன் பகுதியில் தன் குருநாதர் பாலசந்தர் நினைவுச் சிலையைத் திறக்கும் கமல் தனது பிறந்தநாள் விழாக்கள் தொடர்பாக, நவம்பர் 17 நடக்கவிருக்கும் இளையராஜா இசை நிகழ்ச்சியில் யாரெல்லாம் பாடுகிறார்கள் என்பது குறித்துப் பேச பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.