ஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கு பிறந்தநாள்... தரமான கிப்ட் கொடுத்து அசத்திய விவேக்... இப்படி ஒரு பரிசை கமலே எதிர்பார்த்திருக்க மாட்டார்...!

By Asianet TamilFirst Published Nov 7, 2019, 3:55 PM IST
Highlights

சின்ன கலைவாணன் விவேக், "உலக நாயகனுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். உலக மகா கலைஞர்களின் வரிசையில் வைத்து போற்றத் தக்க கமல் ஹாசன் அவர்களுக்கு என் இனிய இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் கமலே பார்த்து அசந்து போகும் படி அவருக்கு ஒரு சூப்பர் கிப்ட் ரெடியாக உள்ளதையும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். 

ஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கு பிறந்தநாள்... தரமான கிப்ட் கொடுத்து அசத்திய விவேக்... இப்படி ஒரு பரிசை கமலே எதிர்பார்த்திருக்க மாட்டார்...!

உலக நாயகன் இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரையுலகில் 60 ஆண்டுகளை கடந்துள்ள கமல் ஹாசனை திரைத்துறையினர் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பினர் மனமார பாராட்டி வருகின்றனர். திரையுலகில் பல்வேறு புதுமைகளை செய்த கமல் ஹாசனை சிறப்பிக்கும் விதமாக கமல் 60 என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது. இதையடுத்து #HBDKamalHaasan, #HappyBirthdayKamalhaasan, #Ulaganayagan ஆகிய ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. கமல் ஹாசன் பிறந்த நாளை சிறப்பிக்க 3 நாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து சோசியல் மீடியாவிலும் ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார் ஆழ்வார்பேட்டை ஆண்டவர். 

இந்நிலையில் சின்ன கலைவாணன் விவேக், உலக நாயகனுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். "உலக மகா கலைஞர்களின் வரிசையில் வைத்து போற்றத் தக்க கமல் ஹாசன் அவர்களுக்கு என் இனிய இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் கமலே பார்த்து அசந்து போகும் படி அவருக்கு ஒரு சூப்பர் கிப்ட் ரெடியாக உள்ளதையும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அது விவேக்கின் மனம் கவர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் எழுதிய அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தை பரிசாக அளிக்க உள்ளார். 

உலக மகா கலைஞர்களின் வரிசையில் வைத்து போற்றத் தக்க அவர்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..! pic.twitter.com/r1H3om79CN

— Vivekh actor (@Actor_Vivek)

அந்த புத்தகத்தின் அட்டை பக்கத்திற்கு பின்புறம்,  "தமிழ் சினிமாவை உலக சினிமாவாக மாற்றும் முயற்சியில் எப்போதும் உழைக்கும் மகா கலைஞன் கமல் அவர்கட்கு என் அன்பு, பிறந்தநாள் நினைவுப் பரிசு" என்று எழுதி, தனது கையெழுத்தை போட்டுள்ளார். அப்துல்கலாம் கண்ட கனவுகளைப் போலவே கமல் ஹாசனும் இளைஞர் சக்தியை மதித்து போற்றக்கூடியவர். இளைஞர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைப்பது போல் அரசியலிலும் கால் வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதனால் கமல் ஹாசனின் மக்கள் நீதி  மய்யம் கட்சியில் கூட இளைஞர்களுக்கு அதிக முக்கியவத்தும் அளிக்கப்படுகிறது. அதேபோல கமல் ஹாசன் வருகிறார் என்றால் அவரது பேச்சைக் கேட்க அதிக அளவில் கூடுவதும் இளைஞர்களின் கூட்டம் தான். எனவே சிறப்பான கிப்ட்டையே விவேக், கமல் ஹாசனுக்கு பரிசளித்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

click me!