
பிக்பாஸ் வீட்டில் சுரேஷ் சக்கரவர்த்தி, கேப்ரில்லாவுக்காக தனி ஆளாக நின்று தலைவருக்கான போட்டியில், கேப்ரில்லாவை ஜெயிக்க வைக்க போராடினார். 15 நிமிடங்கள் வரை, சுரேஷ் தன்னுடைய வலிகளை வெளிக்காட்டி கொள்ளாமல் நின்ற போதிலும் கேப்ரில்லா மனம் தாங்காமல் கீழே இறங்கினார்.
இவரின் இந்த அசாத்திய செயலுக்கு மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு கிடைத்தது. பிரபலங்கள் பலரும் இவரின் உண்மை முகம் வெளிப்பட்டதாக கூறினர்.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில், கமல் இதை பற்றி தான் பேசியுள்ளார் கேப்ரில்லவிடம். மேலும் சுரேஷின் நல்ல குணம் வெளிப்பட்டதாக பாராட்டியுள்ளார். இதனை அப்பா ஸ்தானத்தில் இருந்து செய்தீர்களா அல்லது தாத்தா ஸ்தானத்தில் இருந்து செய்தீர்களா என கமல் கேட்ட போது, தாத்தா ஸ்தானத்தில் இருந்தே செய்ததாக பெருமையாக கூறுகிறார் சுரேஷ். இதற்க்கு போட்டியாளர்களும் கை தட்டி தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.