
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இன்று முதல் போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேற உள்ள நிலையில், இது குறித்த ப்ரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.
இன்றைய தினம் யார் வெளியேற உள்ளார் என்பதை அறிவிக்கும் முன், தன்னுடைய சட்டையை கழட்டி வைத்து விட்டு, ஆயுதத்தை எடுக்க உள்ளதாக மாஸ் காட்டியுள்ளார். இவர் கொடுக்கும் பில்டப்புகள் பார்த்து போட்டியாளர்கள் என்ன செய்ய போகிறாரோ என்கிற அச்சத்தில் உள்ளது அவர்கள் முகத்திலேயே தெரிகிறது.
மேலும் இதனை மக்களுக்கு மட்டும் சஸ்பென்சாக ஏவிக்ஷன் என கூறுகிறார். ஏற்கனவே , மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று, ரேகா தான் இன்று வெளியேற உள்ளார் என வெளியாகியுள்ள தகவல் எந்த அளவிற்க்கு உண்மை என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.
ஏற்கனவே நேற்றைய தினம் பிக்பாஸ் ஏவிக்ஷன் லிஸ்டில் இடம்பெற்றுள்ள ஆஜித், ஷிவானி, மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் மக்களால் காப்பாற்ற பட்டு விட்டதாக கமல் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.