அடுத்த அதிர்ச்சி... கமல் ஹாசனை கலங்க வைத்த மரணம்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 6, 2020, 5:08 PM IST
Highlights


இந்த செய்தியைக் கேள்விப்பட்ட உலக நாயகன் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். 

ஹாலிவுட் இசையமைப்பாளர்களில் பிரபலமானவரான எனியோ மொரிகோனே உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இத்தாலியைச் சேர்ந்த எனியோ படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என 400க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். 

 

ஹாலிவுட்டில் புகழ் பெற்ற ஒன்ஸ் அபான் ஏ டைம் இன்  அமெரிக்கா, தி அண்டச்சபிள்ஸ், சினிமா பாரடைஸ்  உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இத்தாலி ரசிகர்களால் மேஸ்ட்ரோ என அன்புடன் அழைக்கப்பட்டார். 2007 மற்றும் 2016ம் ஆண்டுகளில் இரு முறை ஆஸ்கர் விருது வென்றுள்ளார். 

 

இதையும் படிங்க: ஒரே ஒரு போன் கால்.... வெளவெளத்து போன ரஜினிகாந்த்... இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவித்த கதை தெரியுமா?

ரோமில் உள்ள வீட்டில் கீழே தவறி விழுந்ததால் இடுப்பு எலும்பில்  முறிவு ஏற்பட்ட எனியோ, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். 91 வயதாகும் எனியோ மொரிகோனேவின் மறைவு இசைப்பிரியர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

இதையும் படிங்க: 

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட உலக நாயகன் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். சார், நாங்கள் ஒருபோதும் உங்களை மறக்க மாட்டோம். நீங்கள் கேட்கவும், வாழவும், மேம்படுத்தவும் அதற்கும் மேலும் போதுமான இசையை வழங்கியுள்ளீர்கள். நன்றி, வணக்கம்.. உங்களை எப்போது மறைந்த மொரிகோனே என யாரும் அழைக்க மாட்டார்கள் என பதிவிட்டுள்ளார். 

Guru . Sire we shall never miss you! You’ve given enough music to listen, live with, improvise and go beyond. Thank you & Salutes! He’ll never be called late Mr.Morricone. He will always be on time.

— Kamal Haasan (@ikamalhaasan)
click me!