மகனை மிஞ்சிய அம்மா... 81 வயதில் சேலையில் தண்டால் எடுத்து அசத்தும் பிரபல நடிகரின் தாய்! வீடியோ..!

By manimegalai a  |  First Published Jul 6, 2020, 5:06 PM IST

தன்னுடைய 81 வயதிலும் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதுடன் தண்டால் எடுத்து அசத்தும் தாய்யின் வீடியோவை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார் பிரபல நடிகர்.
 


தன்னுடைய 81 வயதிலும் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதுடன் தண்டால் எடுத்து அசத்தும் தாய்யின் வீடியோவை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார் பிரபல நடிகர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி ஏன் ஆங்கில படங்களில் நடித்துள்ளார் நடிகர் மிலிந்த் சோமன். இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். 54 வயசிலும் பார்க்க 20 வயசு பையன் போல் செம்ம பிட்டாக இருக்கும் மிலிந்த் சோமனுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். 

Tap to resize

Latest Videos

மாடலிங் துறையில் பிரபலமான இவர், அவ்வப்போது சில சர்ச்சை புகைப்படங்கள், மற்றும் தன்னுடைய அழகிய இளம் மனைவியுடன்  புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட, கடந்த 25 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட நிர்வாண படமொன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்து, பரபரப்பை ஏற்படுத்தினார்.

வயசானாலும் காதல் மன்னனாக வலம் வருகிறார்  மிலிந்த் சோமன்.  கடந்த 2006ம் ஆண்டு மைலின் ஜம்பனாஸை என்ற நடிகையை கரம் பிடித்த சோமன், கருத்து வேறுபாடு காரணமாக 2009ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். 

அதன் பின்னர் 26 வயதான அங்கிதா என்ற விமான பணிப்பெண்ணை 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது, காரணம் இவர்கள் இருவருக்கும் இடையே சுமார் 26 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருந்தது. இருப்பினும் அணைத்து தடைகளையும் மீறி, பெற்றோர் சம்மதத்துடன் இவர்களுடைய திருமணம் மிக பிரமாண்டமாக நடந்தது. தற்போது இந்த தம்பதிகள் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தும் வருகிறார்கள்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, மிலிந்த் சோமன் சமீபத்தில் தன்னுடைய 81 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய அம்மாவின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் இந்த வயதிலும் மிகவும் ஆரோக்கியமாக புஷ் அப் செய்யும் காட்சி இதில் இடம்பெற்றுள்ளது. இந்த கால இளசுகளுக்கே சவால் விடுகிறார் பாட்டி. இந்த வீடியோவை  பார்த்து நெட்டிசன்கள் தாறுமாறாக புகழ்ந்து வருகிறார்கள்.

அந்த வீடியோ இதோ...

click me!