
கமல் ஹாசன் பிறந்தநாள் விழாவிற்காக பரமக்குடி சென்ற பூஜா குமார், அவரது குடும்ப புகைப்படத்திலும் துண்டு போட்டு இடம் பிடித்தார். அந்த ஒரு போட்டோவால் கூகுளில் லட்சக்கணக்கானோர் தேடும் பிரபலமாக மாறினார். கமல் ஹாசன் குடும்ப போட்டோவில் மட்டுமல்லாது, ராஜ் கமல் நிறுவன திறப்பு விழாவிலும் பங்கேற்ற பூஜா குமார், கமலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சர்ச்சையை கிளப்பியது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான கமல் ஹாசனுக்கும், பூஜா குமாருக்கும் என்ன தொடர்பு என அவரது ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவரும் குழம்பினர்.
இதையும் படிங்க: "பிகில்" படத்தில் விஜய் போட்ட சிவப்பு ஜெர்சி.... அதை இப்போ யார் வச்சிருக்கா தெரியுமா?
பூஜா குமார் கமலின் உத்தம வில்லன், விஸ்வரூபம் 1&2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதற்காக குடும்ப புகைப்படத்தில் நிற்க வைக்கும் அளவுற்கு என்ன நெருக்கம் என்ற சர்ச்சை கமல் ஹாசனின் பிறந்தநாளின் போதே எழுந்தது. இணையத்தில் வைரலான அந்த புகைப்படங்களைப் பார்த்த ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் சோசியல் மீடியாவில் வைரலான புகைப்படங்கள் எவ்வித விஸ்வரூபமும் எடுக்கவில்லை. தற்போது சற்றே அடங்கி இருந்த பிரச்னையை மீண்டும் கிளப்பியுள்ளார் பூஜா குமார்.
இதையும் படிங்க: வெப் சீரிஸுக்காக வில்லி அவதாரம்... விஸ்வரூபம் எடுக்க தீர்மானித்த சமந்தா...!
கமல் ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு சத்யம் திரையரங்கில் ஹேராம் படம் திரையிடப்பட்டது. ஏற்கெனவே பரமக்குடி வரை பறந்து சென்ற பச்சைக்கிளி, கமலை இங்கும் விடாமல் தொற்றிக் கொண்டது. அந்நிகழ்ச்சியில் கமலுடன் பங்கேற்ற பூஜா குமார், அந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். பூஜா குமாரின் இந்த செயல் சும்மா இருந்த வாய்க்கு அவுல் கொடுத்தது போல் ஆகிவிட்டது. அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், "ஆமா நீங்க எப்ப கமல் குடும்பத்தில சேர்ந்தீங்க, சர்ட்டிபிகேட் காட்டுங்க", "அவரு ஒரு கட்சி தலைவர்ன்னு தெரிஞ்சும் ஏன் இப்படி பண்றீங்க", "உங்களுக்கு அங்க என்ன வேலைன்னு" பூஜா குமாரை சரமாரியாக வறுத்தெடுத்து வருகின்றனர். ரசிகர்களின் கேள்விக்களுக்கு வாய் திறக்காத பூஜா குமார், முடிஞ்சி போனதா நினைச்ச ஒரு விஷயத்தை மீண்டும் ஆரம்பிச்சிவிட்டிருக்காங்க.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.