வெப் சீரிஸுக்காக வில்லி அவதாரம்... விஸ்வரூபம் எடுக்க தீர்மானித்த சமந்தா...!

Published : Nov 12, 2019, 03:23 PM IST
வெப் சீரிஸுக்காக வில்லி அவதாரம்... விஸ்வரூபம் எடுக்க தீர்மானித்த சமந்தா...!

சுருக்கம்

கதை மிகவும் பிடித்ததால் "த பேமிலி மேன்" இரண்டாம் பாகத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார் சமந்தா. மேலும் இந்த வெப் சிரீஸுல் சமந்தா வில்லியாக நடிக்கிறார். அதுவும் தீவிரவாதியாக நடிக்க உள்ளார். 

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. பக்கா சென்னை பொண்ணான சமந்தா, மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் வைத்தார். பாணா காத்தாடி, நான் ஈ, நீ தானே என் பொன் வசந்தம், அஞ்சான், கத்தி, தெறி உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். 

தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2017ம் ஆண்டு இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு திரையில் தோன்றாமல் இருந்த சமந்தா, "சூப்பர் டீலக்ஸ்" படம் மூலம் அதிரடி கம்பேக் கொடுத்தார்.

"அஞ்சான்" படத்தில் வில்லனாக நடித்த மனோஜ் பாஜ்பாய் "த பேமிலி மேன்" என்ற வெப் சீரிஸுல் நடித்தார். அமேசான் பிரைமில் வெளியான இந்த சீரியல் நல்ல வரவேற்பு பெற்றது. இதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவு செய்த தயாரிப்பாளர் கதையை சமந்தாவிடம் கூறியுள்ளார். கதை மிகவும் பிடித்ததால் "த பேமிலி மேன்" இரண்டாம் பாகத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார் சமந்தா. மேலும் இந்த வெப் சிரீஸுல் சமந்தா வில்லியாக நடிக்கிறார். அதுவும் தீவிரவாதியாக நடிக்க உள்ளார். 

இந்த வெப் தொடரில் சமந்தாவுடன் பிரியாமணி, சந்தீப் கிஷன் உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர். இதுவரை ஹீரோயினாக வலம் வந்த சமந்தா வில்லியாக ரசிகர்களை மிரட்ட உள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!