உலக நாயகன் என்பதை நிரூபித்த கமல் ஹாசன்... சீன மொழியில் ரீமேக் ஆகும் கமல் திரைப்படம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Dec 16, 2019, 3:56 PM IST
Highlights

வழக்கமாக ஹாலிவுட் படங்களை பார்த்து மெய் சிலிர்த்து போய் தமிழில் காப்பியடிப்பது தான் வழக்கம். ஆனால் தமிழ் திரைப்படம் ஒன்று சீன மொழிக்கு ரீமேக் செய்யப்படும் அதிசயம் "பாபநாசம்" படம் மூலம் நிகழ்ந்துள்ளது. 

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் - மீனா நடிப்பில் வெளியாகி மலையாளத்தில் சூப்பர் ஹிட்டித்த திரைப்படம் "திரிஷ்யம்". கேரளாவில் வசூல் சாதனை படைத்த அந்த திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. 

தமிழில் ஜித்து ஜோசப்பே இயக்க, உலக நாயகன் கமல் ஹாசன், கவுதமி, கலாபவன் மணி, ஆஷா சரத், எம்.எஸ்.பாஸ்கர், நிவேதா தாமஸ், சார்லி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயலும் போலீஸ் அதிகாரியின் மகனை கவுதமி கொலை செய்துவிடுவார். அதனை மறைத்து, மிகப்பெரிய பதவியில் உள்ள போலீஸ் அதிகாரியின் பிடியில் சிக்காமல் தனது குடும்பத்தை கமல் ஹாசன் எப்படி தப்ப வைத்தார் என்பதே கதை. 

சூப்பர் ஹிட்டான "பாபநாசம்" திரைப்படம் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பிலும், இந்தியில் அஜய்தேவ்கன் நடிப்பிலும், கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடிப்பிலும் வெளியாகி தென்னக சினிமாவையே ஒரு கலக்கு, கலக்கியது. 

தற்போது "பாபநாசம்" படத்தை சீனா மொழியில் "எ ஷீப் வித்தவுட் எ ஷெப்பர்டு" (sheep without a shepherd) என்ற பெயரில் எடுத்துள்ளனர். சீன நடிகர்கள் யாங் சியோ, சுஹோ டன், ஜோன் சென் ஆகியோர்  நடித்துள்ள அப்படம் வரும் 20ம் தேதி திரைக்கு வர உள்ளது. 

வழக்கமாக ஹாலிவுட் படங்களை பார்த்து மெய் சிலிர்த்து போய் தமிழில் காப்பியடிப்பது தான் வழக்கம். ஆனால் தமிழ் திரைப்படம் ஒன்று சீன மொழிக்கு ரீமேக் செய்யப்படும் அதிசயம் "பாபநாசம்" படம் மூலம் நிகழ்ந்துள்ளது. என்ன தான் ஒரினல் கதையில் மோகன்லால் கெத்து காட்டியிருந்தாலும், உலக நாயகன் என்பதை கமல் ஹாசன் மீண்டும் நிரூபித்துள்ளதாகவே தமிழக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

click me!