
பல்வேறு நாட்டுப்புற பாடல்களை பாடி, பிரபலமானவர் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவருடைய மனைவி அனிதா குப்புசாமி.
இவரின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. திரையுலகிலும் பல்வேறு நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளனர். பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும், வெளிநாடுகளிலும் அதிகம் கலந்து கொள்வதால் புஷ்பவனம் குப்புசாமியால் திரையுலகில் அதிகம் பின்னணி பாடல்களை பாட முடிவது இல்லை.
இந்நிலையில் புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமியின் மகள் பல்லவியை காணவில்லை என இவர்கள், சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகாரின் பேரில், போலீசார் குப்புசாமியின் மகள் பல்லவியை விரைந்து கண்டு பிடிக்க முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் தீவிர விசாரணைக்கு பின்பே உண்மை என்ன என்பது தெரியவரும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.