
எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதில் கச்சிதமாக பொருத்தக்கூடியவர் புரட்சித் தமிழன் சத்யராஜ். வில்லனாக அறிமுகமாகி, நாயனகனாக ஆட்டம் போட்டு, அப்பாவாக அறிவுரை சொல்லி நடித்து வந்த சத்யராஜ், இப்போது தாத்தா அவதாரம் எடுத்துள்ளார். தெலுங்கில் "பாகுபலி" படத்தில் சத்யராஜ் ஏற்று நடித்த கதாபாத்திரம் ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது. கட்டப்பாவாக அசத்தி இருந்த சத்யராஜ் தான் பாகுபலி 2ம் பாகத்திற்கான முக்கிய டுவிஸ்ட். அப்படிப்பட்ட கட்டப்பா கதாபாத்திரம் சத்யராஜுக்கு டோலிவுட்டில் மாஸான மார்க்கெட்டை ஓப்பன் செய்து கொடுத்தது.
அதன் பின்னர் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள சாய் தரம் தேஜ் நடிக்கும் "பிரதி ரோஜு பண்டகே" என்ற படத்தில் அவருக்கு தாத்தாவாக நடித்து அசத்தியுள்ளார் சத்யராஜ். சமீபத்தில் வெளியான அப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. குறிப்பாக அந்த போஸ்டரில் தெரிந்த வயதான தாத்தாவின் சிறுபிள்ளை போன்ற குறும்புத்தனம் அனைவரையும் ரசிக்க வைத்தது.
பலே பலே மகாதிவோய், மஹாணுபவது போன்ற குடும்ப படங்களை இயக்கிய சூப்பர் ஹிட் இயக்குநர் மாருதி இயக்கும் அந்த படத்தில் ராஷி கண்ணா, விஜய் குமார், ராவ் ரமேஷ், சத்யம் ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டிசம்பர் 20ம் தேதி வெளியாக உள்ள அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் சத்யராஜ், சாய் தரம் தேஜ், ராஷி கண்ணா உட்பட படத்தில் நடித்த அனைவரும் சேர்ந்து பாடல் ஒன்றிற்கு நடனமாடினர். ஹீரோவுக்கு டப் கொடுக்கும் விதமாக சத்யராஜ் போட்ட ஆட்டம் அனைவரையும் கவர்ந்திழுத்தது. 65 வயதிலும் பட்டையைக் கிளப்பும் நம்ம பாகுபலி, சத்யராஜின் நடனம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அந்த டான்ஸ் முடிந்ததும், செம்ம ஹாப்பியில் இருந்த சத்யராஜ், ஹீரோ சாய் தரம் தேஜைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அசத்தினார். அந்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. மேலும் இப்படம் தெலுங்கில் சத்யராஜுக்கு மற்றொரு மைல் கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.