“சீக்கிரமாக விட்டுச் சென்றுவிட்டீர்கள்”... நடிகர் இர்ஃபான் மரணத்தால் மனமுடைந்து போன உலக நாயகன்...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 29, 2020, 3:27 PM IST
Highlights

இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இர்ஃபான் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் இர்ஃபான் கான். பாலிவுட்டில் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற லைஃப் ஆஃப் பை, பிகு, லன்ச் பாக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இர்ஃபான் கான். ஹாலிவுட்டில் கூட அமேசிங் ஸ்பைடர்மேன், ஜூராஸிக் வேர்ல்ட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 2018ம் ஆண்டு நியூரோ எண்டோகிரைன் என்ற புற்றுநோய் கட்டியால் பாதிக்கப்பட்ட இர்ஃபான் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். 

இதையும் படிங்க: இந்துக்கள் என்ன இளிச்சவாய்களா?... ஜோதிகாவிற்கு சப்போர்ட் செய்த சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...!

இந்நிலையில் நேற்று பெருங்குடல் தொற்று காரணமாக மும்பையில் உள்ள கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் 54 வயதான இர்ஃபான் கான் தனது குடும்பத்தினரை சோகத்தில் மூழ்கடித்துவிட்டு காலமானார்.  இர்ஃபான் கானின் திடீர் மறைவால் இந்திய சினிமாத்துறையே கலங்கி போயுள்ளது. 

இதையும் படிங்க:  பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!

திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் தங்களது வலியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். ஹாலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத இந்திய நடிகர்களில் ஒருவராக புகழ் பெற்ற போதும், பிற மொழி நடிகர்களுடன் நல்ல நட்பு பாராட்டிய மாண்புள்ளவர் இர்ஃபான். இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இர்ஃபான் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

Too soon to leave Ji. Your work always left me in awe. You’re one of the finest actors I know, I wish you stayed longer. You deserved more time. Strength to the family at this time.

— Kamal Haasan (@ikamalhaasan)

அதில், “சீக்கிரம் விட்டுச் சென்றுவிட்டீர்கள் இர்ஃபான் ஜி. உங்கள் நடிப்பு என்றுமே என்னை வாயடைக்க வைத்துள்ளது. எனக்கு தெரிந்த மிகச்சிறந்த நடிகர்களில் நீங்களும் ஒருவர். நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று விரும்பினேன். அதற்கான தகுதி உங்களுக்கு உள்ளது. இந்த சோகத்தை தாங்கும் வலிமை அவரது குடும்பத்திற்கு கிடைக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார். 
 

click me!