Kamal Haasan : விக்ரம் படத்தின் இந்தி பதிப்பை புரமோட் செய்யும் விதமாக டெல்லி சென்றிருந்த நடிகர் கமல்ஹாசன், அங்கு நடந்த பிரஸ் மீட்டில் கலந்துகொண்டார்.
கமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் விக்ரம். தமிழில் தயாராகி உள்ள இப்படத்தை இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக வெளியிட உள்ளனர். வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
விக்ரம் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சி உள்ளதால் இப்படத்தில் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் விக்ரம் படத்தின் இந்தி பதிப்பை புரமோட் செய்யும் விதமாக டெல்லி சென்றிருந்த நடிகர் கமல்ஹாசன், அங்கு நடந்த பிரஸ் மீட்டில் கலந்துகொண்டார்.
அப்போது பான் இந்தியா படங்களின் ஆதிக்கம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், பான் இந்தியா படங்கள் என்பது பல்வேறு மொழிகளில் இருந்து எப்போதுமே வந்துகொண்டு தான் இருக்கிறது. அது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்கா போல் இல்லாமல், நாம் பல மொழிகளை பேசினாலும், நாம் ஒற்றுமையாகவே உள்ளோம். அது தான் நம் நாட்டின் சிறப்பம்சம்.
ஆர்.ஆர்.ஆர் மற்றும் கேஜிஎப் 2 படங்களின் வெற்றிக்கு பின்னர் இந்தி மற்றும் தென்னிந்திய மொழி படங்களுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கமல், நான் ஒரு இந்தியன்.. நீங்கள்? என எதிர் கேள்வி எழுப்பியதோடு, படம் நன்றாக இருந்தால் அனைத்து மொழி ரசிகர்களும் கொண்டாடுவார்கள் என பதிலளித்தார்.
இதையும் படியுங்கள்... Vikram dialogue : கமல் பேசிய ஆபாச வசனத்தை போஸ்டர் அடித்து ஒட்டிய ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு