Kaajal pasupathi Vs Silk Smitha: சினிமா நடிகைகளுக்கு பட வாய்ப்பினை தேடி தரும் ஷார்ட் ரூட்டாக இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் அமைத்துள்ளன. அதில் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி தங்கள் புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர். அப்படி, தற்போது நடிகை காஜல் பசுபதி நடத்திய போட்டோ ஷுட் ஒன்று இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.
சினிமா நடிகைகளுக்கு பட வாய்ப்பினை தேடி தரும் ஷார்ட் ரூட்டாக இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் அமைத்துள்ளன. அதில் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி தங்கள் புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர். அப்படிதற்போது நடிகை காஜல் பசுபதி நடத்திய போட்டோ ஷுட் ஒன்று இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.
காஜல் பசுபதி திருமணம்:
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பல்வேறு படங்களில் நடித்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலம் ஆனவர் நடிகை காஜல் பசுபதி. தமிழ் சினிமாவில், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர். இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர டிஷ்யூம், சிங்கம், கோ, மௌனகுரு, கௌரவம், இரும்பு குதிரை, கலகரப்பு 2 என தொடர்ந்து படங்கள் நடித்துள்ளார்.
undefined
காஜல் பசுபதி பிக் பாஸ் நிகழ்ச்சி:
தொடந்து படங்களில் பிஸியான நடித்து கொண்டிருக்கும் போது, இடையில் நடன இயக்குனர் சாண்டியை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, இவருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து, காஜல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் காஜல், சினிமா முதல் அரசியல் வரை அனைத்திலும் கருத்து சொல்லி சர்சையை கிளப்பி வருகிறார். சமீப காலமாக ரியாலிட்டி சோவிலும் கலந்து வருகிறார்.
சில்க் ஸ்மிதா போல மாறிய காஜல்..?
தற்போது காஜல் அகர்வால் அச்சு அசல் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை போல உடை அணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். மேலும், அந்த கேப்ஷனில், தலைவி போல வர முடியாது இருந்தாலும் தலைவிக்காக தலைவி போஸ் முயற்சி செய்வதில், தவறு இல்லை என்று பதிவு செய்துள்ளார்.