கர்நாடகாவில் தக் லைஃப் படத்துக்கு தடை - நீதிமன்றத்தை நாடிய கமல்ஹாசன்

Published : Jun 02, 2025, 02:45 PM IST
Kamal Hasan Thug Life row

சுருக்கம்

தக் லைஃப் திரைப்படத்திற்கு கர்நாடகாவில் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து கமல்ஹாசன் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

Kamalhaasan Oppose Thug Life Movie Ban in Karnataka : கன்னட மொழி தமிழ் மொழியிலிருந்து உருவானது என்ற சர்ச்சைக்குரிய கருத்தை நடிகர் கமல்ஹாசன் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவரது 'தக் லைஃப்' படத்தை கர்நாடகாவில் வெளியிட கன்னட அமைப்புகள் மற்றும் கன்னட திரையுலகம் தடை விதிக்க முடிவு செய்துள்ளன. இதையடுத்து, தனது படம் வெளியிட எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் இருக்க, நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சமீபத்தில் 'தக் லைஃப்' பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன், கன்னடம் தமிழில் இருந்து உருவானது என்று கூறியிருந்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் கன்னடம் இரண்டும் திராவிட மொழிகள் என்றாலும், இரண்டும் வெவ்வேறு வடிவங்களைக் கொண்டவை. ஆனால், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காமல், தனது சர்ச்சைக்குரிய கருத்தை நியாயப்படுத்த முயற்சித்துள்ளார். இதனால், கர்நாடகாவில் கமல்ஹாசனுக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

தக் லைஃப் தடையை எதிர்த்து கமல் வழக்கு

இந்நிலையில், கமல்ஹாசனின் புதிய படமான 'தக் லைஃப்' படத்தை கர்நாடகாவில் வெளியிடக் கூடாது என கன்னட திரையுலகம் மற்றும் கன்னட அமைப்புகள் தடை விதித்துள்ளன. கன்னடர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, 'தக் லைஃப்' படத்தை வெளியிட நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தப் படம் ஜூன் 5 ஆம் தேதி மாநிலம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், கர்நாடகாவில் பல்வேறு கன்னட அமைப்புகள் படத்தின் வெளியீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திரையரங்குகளுக்கு முன்பாகவும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதையடுத்து, கமல்ஹாசன் தனது நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது படத்தை வெளியிட அரசு, காவல்துறை மற்றும் திரைப்பட வர்த்தக சபை தடை விதிக்கக் கூடாது எனவும், திரையரங்குகளில் படம் தங்கு தடையின்றி வெளியாகவும், போதுமான பாதுகாப்பு வழங்கவும் கோரியுள்ளார்.

கமல்ஹாசனின் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது : “அரசு, காவல்துறை மற்றும் திரைப்பட வர்த்தக சபை படத்தை வெளியிட தடை விதிக்கக் கூடாது. திரையரங்குகளில் படம் தங்கு தடையின்றி வெளியாகவும், போதுமான பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கை. மாநில காவல்துறை தலைவர் மற்றும் நகர காவல் ஆணையருக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் நீதிமன்றம் பிறப்பிக்கவுள்ள தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஒருபுறம் ரசிகர்கள் படம் வெளியாக காத்திருக்கும் நிலையில், மறுபுறம் கன்னட மொழி ஆர்வலர்களின் எதிர்ப்பும் போராட்டமும் தொடர்கிறது. இந்த சர்ச்சையால் 'தக் லைஃப்' படம் கர்நாடகாவில் வெளியாகுமா? இல்லையா? என்ற கேள்விக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பே முற்றுப்புள்ளி வைக்கும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: அப்பாவை கட்டிப்பிடித்து கதறி அழுத சரவணன் : கூலா வேடிக்கை பார்த்த மயில்!
டபுள் எவிக்‌ஷன்... பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் காலியாகப்போகும் 2 விக்கெட் யார்?