
Dhanush vs Nayanthara : நடிகர் தனுஷும், நடிகை நயன்தாராவும் யாரடி நீ மோகினி, எதிர்நீச்சல், நானும் ரெளடி தான் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றினாலும் சமீப காலமாக அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு பனிப்போர் நிலவி வருகிறது. நயன்தாரா தன்னுடைய ஆவணப்படத்தை கடந்த ஆண்டு நெட்பிளிக்ஸில் ரிலீஸ் செய்தார். அந்த ஆவணப்படத்திற்காக நானும் ரெளடி தான் பட பாடல்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரி இருக்கிறார் நயன்தாரா. ஆனால் தனுஷ் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை.
அந்த பாடல் அனுமதிக்காக சுமார் இரண்டு ஆண்டுகள் அந்த ஆவணப்படத்தை வெளியிடாமல் வெயிட் பண்ணி வந்த நயன்தாரா, ஒரு கட்டத்தில் அந்த பாடல்கள் இல்லாமல் ஆவணப்படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்தார். அதன்பின்னர் அந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆனபோது, அதில் நானும் ரெளடி தான் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்று இருந்தன. அதற்கு உரிமை கோரி நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீஸில் அந்த காட்சிகளை நீக்காவிட்டால் 10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தனுஷ் குறிப்பிட்டு இருந்தார்.
இதனால் ஷாக் ஆன நயன்தாரா, நடிகர் தனுஷுக்கு பதிலடி கொடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், அவரை சரமாரியாக சாடி இருந்த நயன்தாரா, அவர் ஆடியோ லாஞ்சில் பேசுவதெல்லாம் நடிப்பு என்றும், அவரின் உண்மை முகம் வேறு என்றும் விமர்சித்து இருந்தார். இதையடுத்து நயன்தாரா மீது தனுஷ் வழக்கு தொடர்ந்து, அது விசாரணை நடைபெற்று வருகிறது. தன்னை விமர்சித்து பேசிய நயன்தாராவுக்கு எந்தவித பதிலடியும் கொடுக்காமல் இருந்த தனுஷ், குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆவேசமாக பேசி இருக்கிறார்.
அதில் அவர் பெயரைக் குறிப்பிடாமல் பேசியது நயன்தாராவை தான் என்பது அப்பட்டமாக தெரிகிறது என கூறி வரும் நெட்டிசன்கள் அவர் பேசிய வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். அதில் தனுஷ் பேசியதாவது : “என்னைப் பத்தி எவ்ளோ வேணா வதந்தியை பரப்புங்க, என்ன வேணா நெகட்டிவிட்டிய பரப்புங்க. ஒரு ஒருவாட்டியும் என் படம் ரிலீசுக்கு ஒன்றரை மாசம் முன்னாடி நெகடிவிட்டிய பரப்புங்க. என் ரசிகர்கள் தீப்பந்தமா இருக்குற வரைக்கும் நான் போய்கிட்டே இருப்பேன்.
தம்பிங்களா கொஞ்சம் தள்ளிப்போய் விளையாடுங்க ராஜா. இந்த சர்க்கஸ்லாம் இங்க வேணாம். என்னுடைய வழித்துணை என் ரசிகர்கள். நீங்க சும்மா ஒரு 4 வதந்திய பரப்பி விட்டுட்டு, காலி பண்ணிடனும்னு நினைச்சா, அதைவிட முட்டாள்தனம் எதுவும் இல்லை. உங்களால ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது. எண்ணம் போல் வாழ்க்கை... எண்ணம் போல் தான் வாழ்க்கை என பேசி இருந்தார் தனுஷ்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.