'ப்ராஜெக்ட் கே' படத்திற்காக அமெரிக்கா சென்ற கமல்ஹாசன்! வைரலாகும் ஸ்டைலிஷ் புகைப்படம்!

By manimegalai a  |  First Published Jul 19, 2023, 2:44 PM IST

சான் டியாகோவில் நடக்கும் காமிக்-கானில் பங்கேற்கும், ப்ராஜெக்ட் கேயின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அவரின் ஸ்டைலிஷ் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
 


பிரபாஸ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக 'ப்ராஜெக்ட் கே' உருவாகி வருகிறது. இந்த படத்தில்  இவருடன் இணைந்து, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் தீபிகா படுகோன் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின், டைட்டில் மற்றும் டீசர் ஜூலை 20 அன்று சான் டியாகோ காமிக்-கான் (SDCC) 2023 இல் வெளியாக உள்ளது. 

படத்தின் இந்த டீசர் காட்சியை பார்க்கவும்,  ப்ராஜெக்ட் கே என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்ளவும் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் கார்த்திருக்கின்றனர். சான் டியாகோவில் உள்ள காமிக்-கானில் படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாக உள்ள நிலையில் ப்ராஜெக்ட் கே பட குழுவினர் அங்கு சென்றுள்ளனர். நேற்றைய தினம் பிரபாஸ் மற்றும் ராணா டகுபதி இருவரும் 'ப்ராஜெக்ட் கே'  என பெயர் பொறிக்கப்பட்ட உடை அணிந்து ஹாலிவுட் ஸ்டுடியோவின் முன் நிற்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது.

Latest Videos

த்ரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் நெஞ்சில் டாட்டூ குத்திய பிக்பாஸ் ரக்ஷிதா! என்ன போட்டுருக்காங்க பாருங்க!

இவர்களை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன், சான் டியாகோவில் நடக்கும் காமிக்-கான் நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்காசென்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள வீதிகளில், செம்ம ஸ்டைலிஷாக உலகநாயகன் நடந்து செல்லும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

'குக் வித் கோமாளி' அஸ்வினுக்கு விரைவில் டும்.. டும்.. டும்! மணமகள் யார் தெரியுமா? குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

ப்ராஜெக்ட் கே  படத்தை சுமார் 600 கோடி பட்ஜெட்டில், வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. பான் இந்தியா படமாக உருவாகும் இப்படம் அறிவியல் புனைகதையை மையமாக வைத்து உருவாகிறது.  இப்படத்தில் கமல், அமிதாப் போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்கள் இணைந்து நடிப்பது மட்டும் இன்றி, இப்படத்தில்  சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. ப்ராஜெக்ட் கே  படத்தை, இயக்குனர் நாக் அஸ்வின் கதை - திரைக்கதை எழுதி இயக்குகிறார். தொழில்நுட்ப ரீதியாகவும் இந்தப் படம் வேற லெவலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!