நேற்றே எடுத்து முடிக்கப்பட்ட பிக்பாஸ்..! இன்று ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் கை கோர்க்கும் கமல்..!

Published : Dec 24, 2022, 12:55 PM ISTUpdated : Dec 24, 2022, 01:00 PM IST
நேற்றே எடுத்து முடிக்கப்பட்ட பிக்பாஸ்..! இன்று ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் கை கோர்க்கும் கமல்..!

சுருக்கம்

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின், இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் இன்று மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார்.  

கமல் ஹாசன் இன்று ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்து கொள்வதால், இன்று நடைபெற இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நேற்றைய தினமே முடிவடைந்தது.

ராகுல் காந்தியின் இந்த ஒற்றுமை பயணத்தில் பங்கேற்பதற்காக, இன்று காலை 9:30 மணியளவில் நடிகர் கமல் ஹாசன், சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்றடைந்துள்ளார். அங்கு அவருக்கு அமோக வரவேற்பு கொடுக்கப்பட்டது. 

மேலும் இந்த ஒற்றுமை நடை பயணத்தில் கலந்து கொள்வது குறித்து நடிகர் கமலஹாசன் கூறியுள்ளதாவது,  பாரத் ஜூடோ யாத்ராவில்... கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி தனக்கொரு கடிதம் எழுதி இருந்ததாகவும், அதில் தன்னை ஒரு கட்சியின் தலைவராக, தன்னை குறிப்பிட்டுக் கொள்ளாமல் சக குடிமகன் என்று குறிப்பிட்டிருந்தார்.  ஒரு இந்தியனாக இழந்து கொண்டிருக்கும் மாண்புகளை மீட்டெடுக்கும் முயற்சியாகவே இதை தான் கருதுவதாகவும், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட இந்த முன்னெடுப்பில் தலைநகரில் வாழும் தமிழர்களும், பெரும் திரளாக கலந்து கொண்டு ஒத்துழைப்பு தர வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம், இது தேசத்திற்கான ஒரு நடை பயணம் கட்சிகளுக்கும் மற்ற பிரச்சனைகளுக்கும் அப்பாற்பட்டதாக இதனை பார்க்கிறேன் என தெரிவித்தார்.

KGF3 படப்பிடிப்பு துவங்குவது எப்போது..! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்டால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
 
இந்த பயணத்தை ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தை கடந்த 60 நாட்களாக, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை  வருகிறார் ராகுல் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.  12 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களை கடந்து இன்று தலைநகர் டெல்லியை வந்தடைந்துள்ளது இந்த ஒற்றுமை நடை பயணம்.   

இந்த பயணத்தில் கலந்து கொள்வதற்காக இன்று நடைபெற இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நேற்றைய தினமே... முடித்து கொண்டது விட்டு இன்று ராகுல் காந்தியுடன் நடிப்பயணத்தில் கைகோர்த்துள்ளார். இந்த கூட்டணி தேர்தல் கூட்டணி வரை சேருமா என பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில், கமல் - ராகுலின் அரசியல் மூவ் பற்றி விரைவில் தான் தெரியவரும்.

'வணங்கான்' படத்தை தொடர்ந்து... வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்தில் இருந்தும் விலகும் சூர்யா? ஷாக்கிங் தகவல்!
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?