Vikram movie : விக்ரம் படத்தின் ரிலீசுக்கு இன்னும் 4 நாட்களே எஞ்சி உள்ள நிலையில், அதன் பின்னணி இசைப் பணிகளை அனிருத் இன்னும் முடிக்காமல் இழுத்தடித்து வருவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடல் மூலம் ஒரே நாளில் உலகம் முழுவதும், பேமஸ் ஆனார் அனிருத். இதையடுத்து அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் குறுகிய காலத்திலேயே முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார்.
இதுவரை 25 படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத், தற்போது தமிழ் சினிமாவின் அனைத்து டாப் ஹீரோக்களுடனும் பணியாற்றி வருகிறார். அதன்படி தற்போது இவர் கைவசம் ரஜினியின் தலைவர் 169, கமல் நடிக்கும் விக்ரம், இந்தியன் 2, அஜித் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் ஏ.கே.62 போன்ற படங்கள் உள்ளன.
இதில் கமல் நடித்துள்ள விக்ரம் படம் வருகிற ஜூன் 3-ந் தேதி ரிலீசாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் 4 நாட்களே எஞ்சி உள்ள நிலையில், அதன் பின்னணி இசைப் பணிகளை அனிருத் இன்னும் முடிக்காமல் இழுத்தடித்து வருவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
தன்னுடைய இசையை இயக்குனர்கள் குறைசொல்லி மாற்றம் செய்துவிடக் கூடாது என்பதற்காக கடைசி சில தினங்களில் தான் இசைக் கோர்ப்பு பணிகளை மேற்கொள்வாராம் அனிருத். தற்போது விக்ரம் படத்திற்கும் அதே பார்முலாவை அவர் பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது. அனிருத்தின் இந்த செயலால் நடிகர் கமல்ஹாசன் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளாராம்.
இதையும் படியுங்கள்... என்னடா ‘வேதாளம்’ பட சீன அப்படியே காப்பி அடிச்சு வச்சிருக்கீங்க... பாலிவுட் படத்தை பொளந்துகட்டும் நெட்டிசன்கள்