
சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகளும் மக்களின் கவனத்தில் இருக்க வேண்டும் என நிறைய போட்டோ ஷுட், ரீல்ஸ் செய்து கொண்டு இணையத்தில் வைரலாகி வருகிறார்கள். இதனால் ஒரு சில சமயங்களில் சின்னத்திரை பிரபலங்கள் சர்ச்சையிலும் சிக்கி விடுகின்றனர்.
நடிகை ஸ்ரீநிதி பற்றி சிம்புவின் காதலியா..?
அந்த வரிசையில், குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரை சீரியலில் அறிமுகமான ஸ்ரீநிதி, தற்போது சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருகிறார். கடந்த வாரம் தன்னை திருமணம் செய்துகொள்ளக் கோரி நடிகர் சிம்பு வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்ட பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது பிரபல நடிகை குறித்து பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
நடிகை நக்ஷத்ரா பற்றி ஸ்ரீநிதி:
சமீபத்தில் நடிகை ஸ்ரீநிதி, தன்னுடைய நெருங்கிய தோழியான, யாரடி நீ மோகனி தொலைக்காட்சி தொடர் புகழ் நட்சத்திராவை அவரின் காதலர் வீட்டில் பிடித்து வைத்திருப்பதாக கண்ணீர் வீடியோ வெளியிட்டார். அவரை காப்பாற்றாவிட்டால் வி.ஜே.சித்ராவுக்கு நடந்தது தான் நக்ஷுவுக்கும் நடக்கும் என்றார். இந்நிலையில் நடிகை நட்சத்திரா இது குறித்து இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
நடிகை நக்ஷத்ரா பரபரப்பு வீடியோ:
அந்த வீடியோவில் நட்சத்திரா, தற்போது, நான் பிரச்சனையில் இருக்கிறேன் என்றும், என்னுடைய வருங்கால கணவர் வீட்டில் என்னை புடுச்சு வச்சிருக்காங்க..? என்றும் கடந்த சில நாட்களாகவே என்னை பற்றி செய்திகள் பரவி வருகின்றது. ஆனால், நான் நல்லா தான் இருக்கேன். தினமும் ஷூட்டிங்கிற்கு போயிட்டு வந்துட்டு தான் இருக்கேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, என்னை பற்றி கூறிய ஸ்ரீநிதிக்குதான் ஏதோ பிரச்சனை இருக்கிறது. அதனால் நீங்கள் இதை பெருசா எடுத்துக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
வைரல் வீடியோ இதோ ...
மேலும், அவர் என் மீது உள்ள அக்கறையில் எனக்கு அடிக்கடி போன் கால்ஸ், மெசேஜ் செய்து உங்களுக்கு ஏதும் பிரச்சனை இல்லையே என்று பலரும் கேட்டு கிட்டே இருக்காங்க...நிஜமா எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. ப்ளீஸ் இனிமேல், இந்த விஷயத்தை ரொம்ப பெருசாக்காதீங்க என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தன்னை பற்றிய பரவிய வதந்திகளுக்கு நட்சத்திரா முற்றுப்புள்ள வைத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.