Edava Basheer : பிரபல பாடகர் மரணம்... மேடையில் பாடிக் கொண்டிருந்தபோதே உயிரிழந்த பரிதாபம்

By Asianet Tamil cinema  |  First Published May 30, 2022, 8:26 AM IST

Edava Basheer : மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போதே பாடகர் எடவா பஷீர் உயிழ்ந்துள்ள சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


கேரளாவைச் சேர்ந்த பின்னணி பாடகரான எடவா பஷீர் மலையாளத்தில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடி உள்ளார். ஆழப்புழை அருகே உள்ள பத்திரபள்ளியில் ப்ளூ டைமண்ட்ஸ் என்கிற இசைக்குழுவின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்துக்கான இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் எடவா பஷீரும் பங்கேற்றார். 

அந்த நிகழ்ச்சியில் எடவா பஷீரும் பாடல்களை பாடினார். அப்போது கே.ஜே.யேசுதாஸ் பாடிய இந்திப் பாடல் ஒன்றை அவர் பாடியபோது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எடவா பஷீரை மீட்டு அருகில் உள்ள மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Tap to resize

Latest Videos

அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மறைந்த பாடகர் எடவா பஷீர், கேரள இசைக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். அவரது திடீர் மறைவு மலையாள திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பாடகர் பஷீரின் மறைவுக்கு ஏராளமான திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போதே பாடகர் எடவா பஷீர் உயிழ்ந்துள்ள சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்... Suriya : சாலை விபத்தில் ரசிகர் மரணம்.... தகவலறிந்ததும் நேரில் சென்று கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய சூர்யா

click me!