
மலையாள திரையுலகில் பிரபல நடிகராகவும், கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப ஏதார்த்த நடிப்பை வெளிப்படுத்தும் கலைஞனாகவும் ஃபகத் பாசில் விளங்கி வருகிறார். தோற்றமோ, அழகோ ஒரு நடிகனின் திறமையை தீர்மானிக்காது என்பதற்கு ஃபகத் பாசில் ஒரு சிறந்த உதாரணம். அதனால் தான் கொரோனா காலக்கட்டத்திலும் வெற்றி நாயகனாக இவரால் வலம் வர முடிகிறது. “See You Soon”, “ஜோஜி”, “மாலிக்” ஆகிய படங்கள் தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழில் சிவகார்த்திகேயன் உடன் ‘வேலைக்காரன்’, விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது உலக நாயகன் கமல் ஹாசனுடன் கைகோர்த்துள்ள ஃபகத் பசில் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி முடித்த லோகேஷ் கனகராஜ் தற்போது கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார்.
ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் கமல் நடிப்பில் உருவாகும் 232-வது படமாகும். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோருடன் இசையமைப்பாளராக அனிருத், ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் ஒப்பந்தமாகியுள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. விக்ரம் படத்தில் ஃபகத் பாசில் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இன்று ஃபகத் பாசில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு, விக்ரம் படக்குழு அவருக்கு ஒரு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. இதற்கு முன்னதாக விருமாண்டி பட பாணியில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசல் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தற்போது ஸ்பெஷலாக ஃபகத் பாசில் மட்டுமே இருக்கும் விக்ரம் பட போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு, வாழ்த்து கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.