
பிரபல இயக்குநர், நடிகர் அனுராக் காஷ்யப்பின் முன்னாள் மனைவியும் பாலிவுட் நடிகையுமான கல்கி கோச்லின் தல அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு ஆடியிருப்பதாக ரகசிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.
பாண்டிச்சேரியை பூர்விகமாகக் கொண்ட பிரெஞ்ச் நடிகை கல்கி கோச்லின். இந்தியில் முன்னணி நடிகையான இவர் ‘தேவ் டி’ படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் அனுராக் காஷ்யப்பை மணந்துகொண்டார். பின்னர் கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்துவிட்டனர்.
சமீபத்தில் வெளியான ‘கல்லி பாய்’ உட்பட ஏராளமான இந்திப்படங்களில் நடித்துள்ள கல்கிக்கு தமிழ் நன்றாக எழுதப் படிக்கத் தெரியுமென்பதால் நீண்டநாட்களாகவே தமிழ்ப் படங்களில் நடிக்கவேண்டும் என்ற கனவை தனது பேட்டிகளில் தொடர்ந்து தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் அவரது விருப்பம் ‘நேர்கொண்ட பார்வை’ படம் மூலம் நிறைவேறியுள்ளது. கிளைமேக்ஸுக்கு முன்னால் இடம் பெறும் ராப் பாடல் ஒன்றில் கல்கி படு கிளாமராக ஆடியிருக்கிறாராம். இப்பாடலை மலேசிய ராப் பாடகர் ஒருவர் பாடியுள்ளார். இப் பாடல் காட்சியில் அஜீத்தும் மூன்று நாயகிகளில் ஒருவருமான ஸ்ரத்தா ஸ்ரீநாத்தும் தோன்றுகிறார்கள். இச்செய்தியை இன்னும் ஓரிரு தினங்களில் படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிடும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.