அப்பல்லோ ரகசியங்களை படம் எடுக்க ஜெயலலிதா ஆன்மாவுடன் பேசப்போகும் இயக்குநர்...

Published : Apr 08, 2019, 02:00 PM IST
அப்பல்லோ ரகசியங்களை படம் எடுக்க ஜெயலலிதா ஆன்மாவுடன் பேசப்போகும் இயக்குநர்...

சுருக்கம்

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஏழெட்டுப் படங்களில் ஒன்று கூட முறையான படப்பிடிப்புக்குச் செல்லாத நிலையில் மீண்டும் ஒரு ஜெயலலிதா-சசிகலா படம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி இந்த புதிய பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஏழெட்டுப் படங்களில் ஒன்று கூட முறையான படப்பிடிப்புக்குச் செல்லாத நிலையில் மீண்டும் ஒரு ஜெயலலிதா-சசிகலா படம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி இந்த புதிய பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ஜெகதீஸ்வர ரெட்டி, 'ஜெயம் மூவிஸ்' என்ற பெயரில் பல படங்கள் தயாரித்திருக்கிறார். அனைத்து இந்திய மொழிகளிலும் படங்கள் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.

தற்போது அவர் தயாரித்து இயக்கப் போவதாக அறிவித்திருக்கும்  படத்தின் பெயர் 'சசி லலிதா'. 

ஜெயலலிதா மீது கொண்ட அன்பினால் அவரின் வாழ்க்கையை படமாக எடுக்கப்போவதாக அறிவிக்கும் இவர்   ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களும் இப்படத்தில் இருக்கும்..

சிறு வயதில் எப்படி இருந்தார்? எப்படி நடிகையாக ஆனார்? அரசியலில் அடியெடுத்து வைத்தது, அதிமுகவில் அவரது பங்களிப்பு, சசிகலாவின் வாழ்க்கை,  அவருடன் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட தொடர்பு என்று மக்கள் அறியாத பல விஷயங்களையும் உள்ளடக்கி கதையாக இப்படம் இருக்கும் என்கிறார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், டீசரும் இன்று வெளியாகிறது. தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு ஜெயலலிதாவின் வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ள ஆவல் இருக்கும். அதை நிறைவேற்றும் விதமாக இப்படம் இருக்கும்.

குறிப்பாக,  ஜெயலலிதாவின் இறுதி 75 நாட்கள் மருத்துவமனையில் என்ன நடந்தது? என்பது பற்றியும், உச்ச நீதி மன்றத்தில் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்பது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்திருப்பதும், அது பற்றிய முழு விபரத்தையும் உலகிற்கு தெரியப் படுத்தும் விதமாகவும் இப்படம் இருக்கும். சிறுவயது முதல் ஜெயலலிதாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் கூறுவதன் அடிப்படையில் இருப்பதாலும் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களைக் கொண்டிருப்பதாலும்  நிச்சயம் இப்படம் எல்லோர் இதயத்திலும் நீங்காத இடம்பெறும்.

இப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரம் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்’ என்கிறார்.

சந்தடி சாக்கில் அவர் அறிவிக்கும் இன்னொரு சங்கதி சற்றே டென்சனை உண்டாக்கக் கூடியது. ஜெயலலிதா தொடர்பான சில மர்மங்களை வெளிக்கொண்டுவரும் எண்ணத்தில் அவரது ஆன்மாவிடம் பேச சில ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் அதனடிப்படையில் சில முக்கிய காட்சிகள் இருக்கும் என்றும் திகில் கிளப்புகிறார் ஜெகதீஸ்வர ரெட்டி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பட்டு வேஷ்டி சட்டையில் மணமக்களை வாழ்த்திய தளபதி விஜய் – தயாரிப்பாளர் சிவா இல்ல திருமண நிகழ்ச்சியின் சுவாரஸ்யம்!
ஆக்‌ஷனில் இறங்கிய பாண்டியன்: போதுமுடா சாமி…பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வார புரோமோ வீடியோ!