ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினிக்குத் தெரியாமல் நயன்தாராவைப் பின்தொடரும் விக்னேஷ் சிவன்...ஒரு பகீர் சீக்ரெட்...

Published : Apr 08, 2019, 11:51 AM IST
ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினிக்குத் தெரியாமல் நயன்தாராவைப் பின்தொடரும் விக்னேஷ் சிவன்...ஒரு பகீர் சீக்ரெட்...

சுருக்கம்

’ஒருநாளும் நயனைப் பிரியாத இனிதான வரம் வேண்டி வாங்கியிருப்பாரோ விக்னேஷ் சிவன்?’ என்று சந்தேகப்படும் அளவுக்கு தரமான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. ரஜினி படப்பிடிப்புக்கு நயன்தாரா நாளை மும்பை செல்ல உள்ள நிலையில், தனக்கும் மும்பைக்கு டிக்கட் போடும்படி அதே பட நிறுவனத்துக்கு உத்தரவிட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

’ஒருநாளும் நயனைப் பிரியாத இனிதான வரம் வேண்டி வாங்கியிருப்பாரோ விக்னேஷ் சிவன்?’ என்று சந்தேகப்படும் அளவுக்கு தரமான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. ரஜினி படப்பிடிப்புக்கு நயன்தாரா நாளை மும்பை செல்ல உள்ள நிலையில், தனக்கும் மும்பைக்கு டிக்கட் போடும்படி அதே பட நிறுவனத்துக்கு உத்தரவிட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 அன்று மும்பையில் தொடங்கவிருக்கிறது. இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சுமார் ஒரு மாதம் வரை அங்கு நடக்கவிருக்கும் படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா யோகிபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

ஏப்ரல் 10 முதலே நாயகியாக நடிக்கும் நயன்தாராவும் படப்பிடிப்பில் இருக்கிறாராம். அதற்காக ஏப்ரல் 9 ஆம் தேதி புறப்பட்டு மும்பை செல்லவிருக்கிறாராம் நயன்தாரா. இது ஒரு புறமிருக்க, இதே லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படமொன்றை இயக்கவுள்ளார் விக்னேஷ்சிவன். இந்த ஒரு சாக்கு போதாதா? 

நயன்தாரா படப்பிடிப்புக்காக மும்பை செல்வது முடிவானவுடன்,  எனக்கும் பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும் என்று அடம்பிடித்து  படத்தின் கதை விவாதம் தொடர்பாக மும்பை செல்லவேண்டும், எனக்கு அங்கே தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளைச் செய்துகொடுங்கள் என்று தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டாராம் விக்னேஷ்சிவன்.

விக்னேஷ் சிவன் நடத்தவிருப்பது என்னவிதமான டிஸ்கஷன் என்று தெரிந்திருந்தும் நயனின் மனம் கோணாமல் நடந்துகொள்ளவேண்டிய நிர்பந்தத்தில் விக்னேஷ் சிவனுக்கு டிக்கெட் எடுத்து அனுப்பிவிட்டதாம் தயாரிப்பு நிறுவனம். அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை. தான் மும்பைக்கு டிஸ்கஷனுக்கு வந்திருக்கும் விசயம் ரஜினி, முருகதாஸ் உட்பட யாருக்கும் தெரியாமல் ரகஸியம் காக்கப்படவேண்டும் என்ற உத்தரவையும் பட நிறுவனத்துக்குப் போட்டிருக்கிறாராம் விக்னேஷ் சிவன்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?