குழந்தைகளின் ஐஸ்கிரீமைக் கூட பிடுங்கித்தின்ற மன்சூர் அலிகான் மயங்கி விழுந்து மருத்துவமனையில்...

By Muthurama LingamFirst Published Apr 8, 2019, 10:19 AM IST
Highlights

தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைகள் கையிலிருந்த உணவுப்பண்டங்கள் உட்பட எதையும் விட்டுவைக்காமல் வெட்டு வெட்டு என வெட்டிய நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் பிரச்சாரத்தில் மயங்கி விழுந்து நிலக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைகள் கையிலிருந்த உணவுப்பண்டங்கள் உட்பட எதையும் விட்டுவைக்காமல் வெட்டு வெட்டு என வெட்டிய நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் பிரச்சாரத்தில் மயங்கி விழுந்து நிலக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடிகர் மன்சூர் அலிகான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இவர் தேர்தல் அறிவிக்கும் ஒரு மாதத்திற்கு முன்பாகவே, திண்டுக்கல் பகுதியில் தேர்தல் பணிகளை ஆரம்பித்து விட்டார்.

மற்ற அரசியல்வாதிகள் போல் இல்லாமல் வித்தியாசமான முறையில் பொது மக்களை அணுகிவந்த மன்சூர் அலிகான் வீடு வீடாகப் புகுந்து உணவுகளை வேட்டையாடினார். மீன் வறுத்துக்கொண்டிருக்கும் பெண்களிடம் அடுப்படியில் அமர்ந்து மசாலா தடவிக்கொடுத்தார். அடுத்து இட்லி, சட்னிக்கு மாவு அரைத்துக்கொடுத்தார். சாக்கடை அள்ளினார். இளநீர் வெட்டினார். திடீரென்று புரோட்டா மாஸ்டரானார். கமல் அதிக பட்சமாக தசாவதாரத்தில் பத்து அவதாரம் தான் எடுத்தார். ஆனால் திண்டுக்கல் பகுதியில் மன்சூர் எடுத்த அவதாரங்கள் எண்ணிக்கையற்றது.

சுருக்கமாகச்சொன்னால் கடந்த சில தினங்களாகவே திண்டுக்கல் மக்களின் எண்டர்டெயின்மெண்டாகவே மாறிப்போனார் அவர். இந்நிலையில் இன்று காலை முதல் நிலக்கோட்டை தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த மன்சூர் அலிகான், மாலையில் அழகம்பட்டி, சர்க்கரை நாயக்கனூர், காமலாபுரம் போன்ற பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

மன்சூர் அலிகானுடன் இருந்த கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அவரை உடனடியாக நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அவரை அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அதிக ரத்தக்கொதிப்பு காரணமாக அவர் மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இன்னும் சற்று நேரத்தில் மருத்துவமனை இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மறுபடியும் தனது அதிரடி பிரச்சாரத்தை மன்சூர் தொடங்கிவிடுவார் என்று நம்பப்படுகிறது.

click me!