’அரசியல்வாதிகள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் எல்லாமே பொறுக்கிகள்’...ஒரு உத்தம இயக்குநரின் அறிக்கை...

Published : Apr 08, 2019, 08:57 AM IST
’அரசியல்வாதிகள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் எல்லாமே பொறுக்கிகள்’...ஒரு உத்தம இயக்குநரின் அறிக்கை...

சுருக்கம்

சில பல மாதங்களுக்கு முன், நாட்டில் எதுவுமே நடக்காவிட்டாலும் ‘ஏங்க என்னங்க நடக்குது இங்க?’ என்று கழுத்து நரம்பு புடைக்க கூக்குரல் எழுப்பி வந்த முன்னாள் இயக்குநரும் இந்நாள் நடிகருமான தங்கர் பச்சான், நீண்ட கேப்புக்குப் பின்னர் ஒரே ஒரு அரசியல் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிவிப்பில் அரசியல்வாதிகளை மட்டுமல்லாமல் சில ஊடகங்களையும் கூட பொறுக்கித்தின்பவர்கள் என்று நொறுக்கித் தின்றிருக்கிறார் பச்சான். தங்கர் பச்சான் இயக்கம் என்ற பெயரில் இயங்கிவரும் தனது முகநூல் பக்கத்தில் அவர் எழுதி வெளியிட்டிருக்கும் அந்த அபார கருத்து இதோ...

'அரசியல் கட்சிகள் என்னும் பெயரில் பொறுக்கித் தின்பவர்களையெல்லாம்  வைத்துக்கொண்டு ஓட்டுகளுக்கு அலையும் கூட்டம் ஒருபக்கம், மக்களின் உண்மை மனநிலையை வெளிப்படுத்தாமல் அவர்களிடமிருந்து பொறுக்கித்தின்பதற்காக சில தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் கருத்துக்கணிக்கணிப்புகள் எனும் பெயரில் நடத்தும் நாடகங்கள் ஒருபுறம் என இதுமட்டும்தான் தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. இதற்கிடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் மக்களின் நிலை போல் கவலையும், துயரமும் தரக்கூடியது வேறொன்றுமில்லை'

2002ல் ‘அழகி’ என்ற ஒரே ஒரு ஹிட் கொடுத்து விட்டு அடுத்து அரைடஜன் ஃப்ளாப் படங்களை இயக்கியுள்ள தங்கர் பச்சான் சுமார் பத்து வருடங்களாகவே வேலவெட்டி எதுவும் இல்லாமல் இருந்து வருகிறார் என்பது நிஜமாகவே குறிப்பிடத்தக்கது. 
 
PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!