நிஜமாவே அலப்பறை கிளப்புறாங்களேப்பா... 2 புது BMW காரோடு வந்து ரஜினிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கலாநிதி மாறன்

By Ganesh A  |  First Published Sep 1, 2023, 12:25 PM IST

ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்துக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கி இருக்கிறார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.


ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் 10-ந் தேதி திரைக்கு வந்தது. நெல்சன் இயக்கிய இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக ரஜினியுடன் கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமார், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் ஆகியோரும் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். இவர்களுடன் மலையாள நடிகர் விநாயகனும் டெரர் வில்லனாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

ஜெயிலர் படம் ரிலீஸ் ஆனது முதல் பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்ததால் அப்படம் அடுத்தடுத்த நாட்களில் பிக் அப் ஆகி பாக்ஸ் ஆபிஸிலும் அதகளமான சாதனைகளை படைத்தது. ஜெயிலர் படம் ரிலீஸ் ஆன சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக சுற்றுலா சென்றிருந்ததால், அப்படத்தின் வெற்றியை அந்த சமயத்தில் கொண்டாட முடியாமல் போனது. இதையடுத்து கடந்த மாத இறுதியில் ரஜினி சென்னை திரும்பியதும் படிப்படியாக கொண்டாட்டங்கள் களைகட்டின.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... சம்பளம் 100 கோடி தான்... ஆனா ‘ஜெயிலர்’ ரஜினிக்கு கலாநிதி மாறன் கொடுத்த ஷேர் அதுக்கும் மேல! முழு விவரம் இதோ

முதலில் தன்னுடைய ஜெயிலர் பட டீமை மட்டும் அழைத்து அவர்களுடன் ஜெயிலர் பட வெற்றியை நட்சத்திர ஓட்டலில் சிம்பிளாக கொண்டாடி இருந்தார் ரஜினி. சமீப காலமாக ஒரு படம் ஹிட் ஆனாலே அப்படத்தில் நடித்த ஹீரோவுக்கு கார் பரிசளிப்பதை தயாரிப்பாளர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். ஜெயிலரோ இண்டஸ்ட்ரி ஹிட் படம் என்பதால், அப்படத்தை தயாரித்த கலாநிதி மாறன் சும்மா விடுவாறா என்ன. ரஜினி அடுத்தடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

continue! Superstar was shown various car models and Mr.Kalanithi Maran presented the key to a brand new BMW X7 which Superstar chose. pic.twitter.com/tI5BvqlRor

— Sun Pictures (@sunpictures)

நேற்று ரஜினியிடம் ஜெயிலர் பட ஷேர் தொகைக்கான காசோலையை வழங்கிய கலாநிதி மாறன், அதோடு மற்றொரு சர்ப்ரைஸ் கிப்ட்டும் கொடுத்துள்ளார். அதுதான் பிஎம்டபிள்யூ கார். பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 மற்றும் ஐ 7 என இரண்டு மாடல் கார்களை ரஜினியின் வீட்டுக்கே கொண்டு சென்ற கலாநிதி மாறன், இதில் எது உங்களுக்கு பிடித்திருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளுமாறு ரஜினியிடம் சொல்ல, ரஜினி பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 மாடல் காரை தேர்வு செய்துள்ளார். இந்த காரின் மதிப்பு ரூ.1.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... சமந்தாவும், விஜய் தேவரகொண்டாவும் கம்பேக் கொடுத்தார்களா? கடுப்பேற்றினார்களா? குஷி படத்தின் விமர்சனம் இதோ

click me!