நான்கு காலங்களில் நடைபெறக்கூடிய காதல் 'காலங்களில் அவள் வசந்தம்' பட நாயகன் கௌஷிக் ராம் பகிர்ந்த தகவல்!

Published : Oct 21, 2022, 05:17 PM IST
நான்கு காலங்களில் நடைபெறக்கூடிய காதல் 'காலங்களில் அவள் வசந்தம்' பட நாயகன் கௌஷிக் ராம் பகிர்ந்த தகவல்!

சுருக்கம்

அறம் எண்டர்டெயின்மெண்ட், ஶ்ரீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படமான ‘காலங்களில் அவள் வசந்தம்' திரைப்படம் குறித்து படத்தின் நாயகன் கௌஷிக் ராம் கூறியுள்ளார்.  

அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள கலகலப்பான காதல் கதையான ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் டிரெயிலரை சமீபத்தில் சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டார். நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' மற்றும் 'கடைசி விவசாயி' உள்ளிட்ட படங்களை வெற்றிகரமாக வெளியிட்டுள்ள வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட், 'காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தை தமிழகமெங்கும் பிரமாண்டமான முறையில் வெளியிட திட்டமிட்டுள்ளது. 

காதல் மற்றும் நகைச்சுவை கலந்த ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தை இயக்குநர் பிரியாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸுக்கு கதை எழுதி அனுபவம் பெற்றவருமான ராகவ் மிர்தாத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். புதுமுக நடிகர் கௌஷிக்  ராம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். டாணாக்காரன் புகழ் அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். ஹெரோஷினி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வர்கீஸ் மேத்தியூ, ஆர் ஜே விக்னேஷ், அனிதா சம்பத், ஸ்வாமிநாதன், சவுந்தர்யா, ஜெயா ஸ்வாமிநாதன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்: 7 வருட மகிழ்ச்சியான அனுபவம்... 'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பில் நயனுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்த விக்கி!
 

இந்த படத்தின் நாயகன் கெளஷிக் ராம் படம் குறித்து கூறியுள்ளதாவது...

'காலங்களில் அவள் வசந்தம்' திரைப்படத்தில் கதாநாயகனாக கௌஷிக் ராம் நெல்லையில் செய்தியாளர்கள் சந்திப்பில் படம் குறித்து கூறுகையில்... 'நான்கு காலங்களில் நடைபெறக்கூடிய காதல், பொழுதுபோக்கு மற்றும் காமெடி கலந்த திரைப்படமாக இப்படம் உருவாகி உள்ளது'. இயக்குனர், இசையமைப்பாளர், என பலர் இந்த படத்தில் அறிமுகமாகியுள்ளனர். எனக்கு இந்த படம் ஒரு அற்புதமான வாய்ப்பாக அமைந்துள்ளது. அனைவரும் இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும். இதுபோன்று புதுமுக நடிகர்களை மக்கள் ஆதரித்தால் மட்டும் தான் எங்களால் வெற்றி பெற முடியும். லொல்லு சபா சுவாமி நாதனுடன் இணைந்து நடித்திருப்பது தனக்கு மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்துள்ளது. இயல்பாக நமது வாழ்க்கை சினிமாவோடே ஒன்றிருக்கும், இந்த படத்தில் நான் அந்த கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளேன் வித்தியாசமான கதை, தோற்றம், இருப்பதால் அனைவரும் தியேட்டருக்கு சென்று ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. என தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் அக்டோபர் 28 ஆம் தேதி  திரைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் வீட்டில் களைகட்ட துவங்கிய காதல் விளையாட்டு..! உருவாகிறதா 2 காதல் ஜோடி?
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜெயிலர் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் களைகட்டிய சூப்பர்ஸ்டார் பிறந்தநாள் கொண்டாட்டம் - ரஜினியின் பர்த்டே கிளிக்ஸ் இதோ
கொளுத்திப்போட்ட அறிவுக்கரசி... ஜனனியின் பிசினஸுக்கு வேட்டு வைத்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது