கலையரசன் - சாண்டி மாஸ்டர் உட்பட 4 ஹீரோ.. 4 ஹீரோயின்கள் நடிப்பில் உருவாகும் ஹாட் ஸ்பாட்! ஃபர்ஸ்ட் லுக் வெளியானத

Published : Feb 16, 2024, 08:37 PM IST
கலையரசன் - சாண்டி மாஸ்டர் உட்பட 4 ஹீரோ.. 4 ஹீரோயின்கள் நடிப்பில் உருவாகும் ஹாட் ஸ்பாட்! ஃபர்ஸ்ட் லுக் வெளியானத

சுருக்கம்

கலையரசன் - சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், கெளரி கிஷன், அம்மு அபிராமி, ஜனனி ஐயர் நடிக்கும் ஹாட்ஸ்பாட்..திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.  

திட்டம் இரண்டு, அடியே ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் கார்த்தியின் அடுத்து புதிய படம் ஹாட்ஸ்பாட். சமுதாயப் பிரச்சனையை அலசும் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தை, கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில், கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து "ஹாட் ஸ்பாட்" படத்தை தயாரிக்கிறார்கள். மை சிக்ஸர் எண்டெர்டைன்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ் வெளியீடுகிறார்.

Vanangaan Teaser: பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது?

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திட்டம் இரண்டு மற்றும்  ஜிவி பிரகாஷ் குமார் நடித்த அடியே ஆகிய வித்தியாசமான வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் அடுத்த படம் "ஹாட் ஸ்பாட்"  இப்படத்தின்  கதை,  திரைக்கதை,  வசனம் எழுதி இயக்குகிறார். வரும் மார்ச் மாதம் இப்படம்  திரைக்கு வர உள்ளது.  சதீஷ் ரகுநாதன்-  வான் ஆகியோர் இசையமைக்கிறார்கள். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார் முத்தையன் எடிட்டிங் பணியை மேற்கொண்டு இருக்கிறார்.

இதில் கலையரசன் கதாநாயகனாக ஆட்டோ ஓட்டுநராக  மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 96 மற்றும் அடியே பட கதாநாயகி கௌரி கிஷன் இளம் மனைவியாக  வேடம் ஏற்றிருந்தார். அவரது கதாபாத்திரம்  ஆண்கள் மனதில் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தும். மேலும் சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர் , திட்டம் இரண்டு பட ஹீரோ சுபாஷ் சோபியா ஆகியோர் அழுத்தமான வேடங்களில் நடிக்கிறார்கள்.

Poonam Bajwa: பிகினி பேபியாக மாறி.. நீச்சல் குளத்தில் டாப் ஆங்கில் போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா! ஹாட் போட்டோஸ்!

"ஹாட் ஸ்பாட்" படம் பற்றி இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் கூறும் போது," சமுதாயத்தில் அன்றாடம் நம் கண் முன்பே நடக்கும் சில அடிப்படை விஷயங்களை தட்டிக் கேட்க தைரியம் இல்லாமல் அதை கவனிக்காமல் செல்கிறோம். ஆனால் இது சமுதாயத்தில்  பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதன் பின்விளைவுகள் நம்மை பாதிக்கும் போது தான் இப்படி ஒரு சம்பவம் நடந்ததா என்று நாம் யோசிப்போம். அப்படிப்பட்ட  முக்கிய விஷயங்களை அலசும் கதையாக ஹாட் ஸ்பாட் படம் இருக்கும்.  திரைக்கு வந்த பிறகு இப்படம்  சமுதாயத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் இது மக்களை மற்றும் மக்களை சுற்றி நடக்கும் அரசியலை குறித்து விவாதிக்கும் கதை. இளைஞர்கள் முதியவர்கள் மற்றும் அனைத்து சமூகத்தினர் மனங்களில் இப்படம் விழிப்புணர்வையும்,  தட்டி கேட்க வேண்டும் என்ற துணிச்சலையும் தரும்.

ஓவ்வொரு தாயின் கனவு! மகள் திருமணத்திற்காக வீட்டையே மலர் மாளிகை போல் மாற்றிய அருண் விஜய்யின் சகோதரி அனிதா!

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும்  சென்னையில் நடந்து முடிந்துள்ளது. அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது.  முன்னதாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுவே இப்படம் சமுதாயத்தில் என்ன விஷயத்தை பேசப் போகிறது என்ற ஆர்வத்தையும் அதிகரித்து இருக்கிறது. இவ்வாறு இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் கூறினார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!