
நடிகர் விஜய் சேதுபதியுடன் (vijay Sethupathi) நயன்தாரா - சமந்தா முதல் முறையாக இணைந்து நடித்துள்ள படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' (Kaathu Vaakula Rendu Kaadhal). நயன்தாராவின் காதலராக விக்னேஷ் சிவன், இப்படத்தை இயக்கி உள்ளார். ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும், நயன்தாரா (Nayanthara) - விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.விஜய் கார்த்திக் கண்ணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி ராம்போ எனும் கதாபாத்திரத்திலும், சமந்தா (Samantha) காதீஜா எனும் கதாபாத்திரத்திலும், நயன்தாரா கண்மனி எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.
இந்நிலையில், இப்படம் குறித்த மேலும் ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர் (Kala Master) இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி உள்ளாராம். 30 ஆண்டுகளாக திரையுலகில் நடன இயக்குனராக அசத்திய கலா மாஸ்டர், திரைப்படத்தில் நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.