
சிம்புவின் படங்கள் என்றாலே பிரச்சனைகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்தது தான், அந்த வகையில் பல சர்ச்சைகளுக்கும், பிரச்சனைகளுக்கும் மத்தியில், கடந்த மாதம் 25-ந் தேதி வெளியான திரைப்படம் 'மாநாடு'. வெங்கட் பிரபு (Venkat Prabhu) இயக்கிய இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார்.
ரிலீசுக்கு முன்னர் பல்வேறு தடைகளை சந்தித்த இப்படம், அதன் வெற்றியால் தற்போது அவை அனைத்தையும் தவிடுபொடி ஆக்கி உள்ளது. சிம்புவின் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் கவர்ந்த இப்படம் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்தது. இப்படத்தின் வெற்றியை பார்த்து பிரம்மித்து போன பிறமொழி தயாரிப்பாளர்கள் இப்படத்தை தங்கள் மொழியில் ரீமேக் செய்ய போட்டிபோட்டு வருகின்றனர்.
மாநாடு படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக, இன்று அப்படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது. இதில் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்பட அப்படத்தில் பணியாற்றியவர்கள் கலந்துகொண்டனர். ஆனால் இப்படத்தின் ஹீரோ சிம்பு (Simbu) மட்டும் இதில் கலந்துகொள்ளவில்லை. வெளிமாநிலத்தில் படப்பிடிப்பில் இருந்ததால் அவரால் கலந்துகொள்ள முடியவில்லையாம்.
இந்த விழாவில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் (SA Chandrasekar), சிம்பு விழாவிற்கு வராததை சூசகமாக சாடினார். அவர் பேசியதாவது: “இன்று படப்பிடிப்பு இருந்தாலும் சிம்பு இங்கு வந்திருக்க வேண்டும், அவர் வராதது எனது மனதுக்கு கடினமாக இருக்கிறது. தயாரிப்பாளருக்காக அவர் வந்திருக்க வேண்டும். நடிகர்கள் வெற்றி வந்தவுடன் மாறிவிடக் கூடாது, படப்பிடிப்பில் நடந்து கொண்டதை போலவே, படம் வெளிவந்த பிறகும் இருந்தால்தான் நடிகர்களுக்கு வெற்றி தொடரும்” என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.