அடுத்த வாரம் திருமணம்... இது உண்மையா? காஜல் பசுபதி போட்ட பதிவால் குழம்பி போன ரசிகர்கள்.!

Published : Jul 02, 2021, 06:06 PM IST
அடுத்த வாரம் திருமணம்... இது உண்மையா? காஜல் பசுபதி போட்ட பதிவால் குழம்பி போன ரசிகர்கள்.!

சுருக்கம்

பிக்பாஸ் பிரபலமும், டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் முன்னாள் மனைவியுமான காஜல் பசுபதி தனக்கு அடுத்த வாரம் திருமணம் என கூறி, அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது உண்மையா? பொய்யா... என நெட்டிசன்கள் சில குழப்பத்தில் கேள்வி எழுப்பி வந்தாலும், சிலர் இவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.   

பிக்பாஸ் பிரபலமும், டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் முன்னாள் மனைவியுமான காஜல் பசுபதி தனக்கு அடுத்த வாரம் திருமணம் என கூறி, அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது உண்மையா? பொய்யா... என நெட்டிசன்கள் சில குழப்பத்தில் கேள்வி எழுப்பி வந்தாலும், சிலர் இவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

பிரபல மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகமானவர் காஜல் பசுபதி. என்ஜினீயரிங் படித்திருந்தாலும், சினிமா மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக நிகழ்ச்சி தொகுப்பை தேர்வு செய்தார். இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் மூலம் காஜலுக்கு பல ரசிகர்களும் உருவாகினர்.

இதனால் இவருக்கு சில திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடிக்க, வாய்ப்புகள் கிடைத்தது.  பின் பிரபல நடன இயக்குனர் சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், சில காலம்  திரையுலகை விட்டு ஒதுங்கியே இருந்தார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று காஜல் தன்னுடைய பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். சாண்டி தன்னுடைய ரசிகை சில்வியா என்பவரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிகளுக்கு லாலா என்கிற மகள் உள்ள நிலையில், இரண்டாவது முறையாக சில்வியா கர்ப்பமாக இருக்கிறார்.

காஜல் தற்போதும் தன்னுடைய முன்னாள் கணவருடன் நல்ல நட்புடன் இருந்து வருகிறார். காஜல் பசுபதி பிக்பாஸ் சீசன் 1  நிகழ்ச்சியில் வயல் கார்டு சுற்று மூலம் போட்டியாளராக உள்ளே இருந்த போது தான் சாண்டிக்கு இரண்டாவது திருமணம் நடந்தது. சாண்டியும் பிக் பாஸ் சீசன் 3  நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போதும் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் காஜல் பசுபதி, திடீர் என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், திடிரென திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது....அடுத்த வாரம் திருமணம்....கொரோனா காரணமாக யாரையும் அழைக்க முடியல .. தப்பா எடுத்துக்காதிங்க... என கூறி ஒரு பதிவை போட்டிருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் இது உண்மையா? பொய்யா என்கிற ஒருவித குழப்பத்துடன் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதே நேரத்தில் பட புரொமோஷன் பணிக்காக இப்படி செய்தாரா? உண்மையாகவே திருமணமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!