மகனை தூக்கி கொண்டு திருப்பதி ஏழுமலையாளை தரிசித்த காஜல் அகர்வால்..!

By manimegalai a  |  First Published Jan 30, 2023, 9:00 PM IST

நடிகை காஜல் அகர்வால் தனது மகன் பிறந்த பின்னர் முதன்முறையாக, திருப்பதி கோவிலுக்கு அழைத்து சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது குறித்த சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிசியாக நடித்து வரும் போதே... தன்னுடைய நீண்ட நாள் நண்பரான, தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். 2020 ஆம் ஆண்டு, இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில், கடந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்தார் காஜல். இவருடைய மகன் நீல் பிறந்து 6 மாதங்கள் ஆன பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் காஜல் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆண்ட்டியை நம்பி போண்டியான நடிகர் கரண்..? சினிமா கேரியரை கோட்டை விட்ட கதையை புட்டு புட்டு வைத்த பயில்வான்!

Tap to resize

Latest Videos

அந்த வகையில், தற்போது இந்தியன் 2 படத்தில் பிஸியாகியுள்ள காஜல். இந்த படத்தில் நடிப்பதற்காக குதிரை ஏற்றம், களரி உள்ளிட்ட பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார். அதே போல் இன்னும் சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் 108 ஆவது படத்தில், இவர் தான் கதாநாயகியாக நடிக்க உள்ளதாககூறப்படுகிறது.

மீண்டும் இணைந்த கைகள்! 'தளபதி 67' பட உச்சாகத்தில் விஜய்யுடன் இருக்கும் மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட லோகேஷ்!

திருமணத்திற்கு பின்னர், படங்களில் பிசியாக இருந்தாலும்... பொறுப்பான மனைவியாகவும், அன்பான தாயாகவும் இருந்து அனைவரையும் ஆச்சாரப்படுத்தி வரும் காஜல், இன்று தன்னுடைய மகன் நீல் மற்றும் தாயாருடன் திருப்பதி கோவிலுக்கு வந்து, தரிசனம் செய்துள்ளார். இது குறித்த சில வீடியோக்கள் யூடியூப் பக்கங்களில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

பிரமாண்டமாக நடந்த நடிகை பூர்ணாவின் வளைகாப்பு..! வைரலாகும் புகைப்படங்கள்..!

திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் காஜலுக்கு, தீர்த்த பிரசாதங்கள் வழங்கி அவரையும், அவரது மகனுக்கும் ஆசிர்வாதம் செய்தனர். காஜலை பார்க்க அங்கு பல ரசிகர்கள் கூடியதால், தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள் இவரை பத்திரமாக அனுப்பி வைத்தனர்

click me!