
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க உள்ள காஜல் அகர்வால் புது படம் குறித்து ஏதாவது அப்டேட் கொடுப்பார் என காத்திருந்த ரசிகர்களுக்கு, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனக்கு 5 வயது முதலே ஆஸ்துமா பிரச்சனை இருப்பதாக காஜல் அகர்வால் கூறியிருப்பது தான் அது. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து பகிர்ந்துள்ள காஜல் அகர்வால், “எனக்கு 5 வயதில் ஆஸ்துமா இருப்பது தெரியவந்தது. அதன் பிறகு எனக்கு உணவுக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது நினைவிருக்கிறது. ஒரு குழந்தை பால் பொருட்கள், சாக்லெட் சாப்பிடக்கூடாது என்பது பாவம் தானே. நான் வளர்ந்த பிறகும் பிரச்சனை சரியாகவில்லை. ஒவ்வொரு முறையும் பயணிக்கும் போதும், பனி, தூசு, புகை போன்ற விஷயங்களை எதிர்கொள்ள நேர்ந்தாலோ ஆஸ்துமா பிரச்சனை பெரிதாகிவிடும். அதனால் நான் இன்ஹேலர் பயன்படுத்த தொடங்கினேன். அதன் பின்னர் பெரிய மாற்றத்தை உணர்ந்தேன்.
இப்பொழுது எப்போதும் இன்ஹேலருடன் இருப்பதை உறுதி செய்து கொள்கிறேன். இதனால் என்னை ஒரு மாதிரி பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். நம் நாட்டில் பலருக்கு இன்ஹேலர் தேவைப்படுகிறது. ஆனால் அடுத்தவர்களின் ரியாக்ஷனுக்காக இன்ஹேலர் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் அல்லது பொதுவில் இன்ஹேலர் பயன்படுத்த வெட்கப்படத் தேவையில்லை. இதை இந்தியா உணர, நான் இன்ஹேலர்களுக்கு எஸ் சொல்கிறேன் #SayYesToInhalers உடன் இணைய என் நண்பர்கள், குடும்பத்தினரைக் கேட்டுக்கொள்கிறேன். ஆஸ்துமா குறித்தும், இன்ஹேலர் பயன்பாடு பற்றியும் நாம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் எனக்கூறி முதற்கட்டமாக உன்னி முகுந்தன், ஜான் ஆபிரகாம், சிரஞ்சீவி ஆகிய நடிகர்களை நாமினேட் செய்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.