
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால், அவரது நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான கோமாளி திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தை தொடந்து, காஜல் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம் 'பாரிஸ் பாரிஸ்'. நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் பாலிவுட் திரையில் வெளியாகி, கங்கனாவிற்கு தேசிய விருதை பெற்று கொடுத்த 'குயின்' படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.
தற்போது உலக நாயகன் கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி வரும் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம் மட்டுமே கைவசம் உள்ளது.
அதன் பின்னர் கைவசம் படங்கள் ஏதும் இல்லாததால், நடிச்ச வரைக்கும் போது கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகலாம் என்ற மூடிற்கு வந்துவிட்டார் காஜல். கல்யாண வாழ்க்கைக்குள் நுழைவதற்கு முன்னாள் சிங்கிளாக வாழ்க்கையை என்ஜாய் பண்ண முடிவெடுத்துள்ளார் காஜல். அதனால் தான் இடைப்பட்ட நாட்களை ஜாலியாக களிப்பதற்காக டூர் சென்றுள்ளார் காஜல் அகர்வால்.
தற்போது மாலத்தீவில் மய்யம் கொண்டுள்ள காஜல் புயல், அங்கு செய்யும் சேட்டைகளை எல்லாம் புகைப்படங்களாக எடுத்து தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். மாலத்தீவில் ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ள காஜல் அகர்வால், அங்குள்ள நீச்சல் குளத்தில் பிகினி உடையில் குளிக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார்.
செம்ம ஹாட் லுக்கில் காஜல் அகர்வால் நீச்சல் குளத்தில் என்ஜாய் செய்யும் அந்த புகைப்படங்கள் லைக்குகளை வாரி குவித்துவருகிறது. சின்ன குழந்தை போல நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் காஜல் அகர்வால், தனது விடுமுறையை முழு சந்தோஷத்துடன் கழிப்பதை அந்த புகைப்படங்களைப் பார்த்தலே தெரிந்து கொள்ள முடியும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.