
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யாவிற்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இதனால் குடும்ப விழாக்களை சமந்தா புறக்கணித்து வருவதாகவும் கூறப்படுகிறது . தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நடிகை சமந்தா . இதனால் நாகார்ஜுனாவின் வீட்டு மருமகளாக மாறிய சமந்தா திருமணத்திற்கு பிறகும் நடித்து வருகிறார் . சமீபத்தில் அக்கினோனி தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றது .
நாகார்ஜுனாவின் குடும்ப விழாவான இதில் அவரது மருமகளான நடிகை சமந்தாவை தவிர மற்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் . திருமணமான ஆரம்ப காலத்தில் சமந்தா இல்லாமல் அவரது வீட்டு விசேஷங்கள் எதுவுமே நடந்ததில்லை , ஆனால் இந்நிலையில் மிக முக்கியமான விழாவான இதில் சமந்தா கலந்து கொள்ளாதது பெரும் கேள்வியை ஏற்படுத்தியுள்ளது . இதில் பல்வேறு திரை பிரபலங்களும் பங்கேற்றனர் , ஆனால் " தீ பேமிலி மேன்" படப்பிடிப்பில் அவர் பிஸியாக இருப்பதாக கூறப்படுகிறது இதைத்தொடர்ந்து நாகர்ஜுனா குடும்பத்தில் நாகேஸ்வரராவின் பேரன் ஆதித்யாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது அதிலும் நடிகை சமந்தாவை காணவில்லை , இது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
செல்வாக்கான குடும்பத்தின் மருமகளான சமந்தா தமது குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தொடர்ந்து தவிர்ப்பது ஏன் என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது . குறிப்பாக கணவர் நாக சைதன்யா இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது சமந்தா மட்டும் கலந்து கொள்ளாதது ஏன் என்றும் திட்டமிட்ட குடும்ப விழாக்களை சமந்தா புறக்கணிக்கிறாரோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.