
தமிழ் சினிமாவில் வருடா, வருடம் எத்தனை காமெடி நடிகர்கள் அறிமுகமானாலும் நம்ம வைகைப் புயல் வடிவேலுவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. நீண்ட காலங்களாக திரையில் வராவிட்டாலும் இளம் தலைமுறையின் மீம்ஸ் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். எந்த நடிகருடன் நடித்தாலும் வடிவேலுவின் காமெடி சும்மா தெறிக்கவிடும்.
அப்படிப்பட்டவர், நக்கல் மன்னன் பார்த்திபன் உடன் ஜோடி போட்டால் கேட்கவா வேண்டும். பார்த்திபனும், வடிவேலுவும் சேர்ந்து நடித்த "வெற்றிக்கொடி கட்டு" படத்தில் வெளியான துபாய் காமெடியை யாராவது மறக்கமுடியுமா?. திரையில் இருவரும் வந்து நின்றாலே தியேட்டரில் சிரிப்பலைகள் ஆரம்பித்துவிடும், அப்படிப்பட்ட குண்டக்க, மண்டக்க கூட்டணி இது.
வைகைப்புயலாக இருந்து தற்போது மீம்ஸ் நாயகனாக மாறியுள்ள வடிவேலுவும், இயக்குநர் மற்றும் நடிகருமான பார்த்திபனும் நேற்று சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பார்த்திபன், இன்றைய சந்திப்பு... நாளைய செய்தியாகலாம்! என்று பதிவிட்டுள்ளார்.
ஒரு வேலை இரண்டு பேரும் சந்தித்தது அடுத்த படத்திற்கான அறிவிப்பு குறித்து பேச இருக்குமோ என்ற சந்தேகமே ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பார்த்திபனின் பதிவைப் பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு நல்ல காமெடி படம் பண்ணுங்க பாஸ், வயிறு குலுங்க சிரிச்சி ரொம்ப நாளாச்சின்னு கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.