உலகநாயகன் கமல்ஹாசனுடன் நடிக்கும் இந்தியன் 2 படத்திற்காக காஜல் ரிஸ்க் எடுத்துள்ள வீடியோ தற்போது வெளியாகி... வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2. பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர், மீண்டும் துவங்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு, தற்போது சென்னையில் பிரமாண்ட செட் போடப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் படத்தில் இருந்து காஜல் வெளியேறிவிட்டதாக கூறப்பட்ட நிலையில், ஒருவழியாக குழந்தை பெற்ற பின்னர்... இந்த பிரமாண்ட படத்தின் மூலம் தன்னுடைய ரீ-என்ட்ரியை கொடுக்க தயாராகியுள்ளார்.
மேலும் செய்திகள்: பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இனி காவியாவாக நடிக்க போவது இவரா? பார்க்க லைட்டா சித்ரா மாதிரியே இருக்காரே!
மேலும் குழந்தை பிறந்த பின்னர், இந்த படத்திற்காக ரிஸ்க் எடுத்து, தில்லாக குதிரை ஓட்டும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். தற்போது இது குறித்த வீடியோ ஒன்று தான் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை வெளியிட்டு, தன்னுடைய இன்ஸ்டாங்க்ராமில் காஜல் கூறியிருப்பதாவது: குழந்தை பிறந்த பின்பு உடற்பயிற்சி செய்து மீண்டும் பழைய உடல் எடையை கொண்டு வருவது என்பது மிகப்பெரிய சவாலான காரியம். நீண்ட நேரம் ஜிம்மில் சென்று உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடை குறைப்பது மிகவும் கடினம். குறிப்பாக தற்காப்புக்கலை பயிற்சி மேற்கொள்ளும் போது தனது உடல் ஒத்துழைக்கவில்லை என்று காஜல் அகர்வால் தெரிவித்து இருந்தார்.
மேலும் செய்திகள்: அஜித்தின் 'துணிவு' பட டைட்டில் காப்பியடிக்கப்பட்டதா? வெளியான சில நிமிடங்களில் எழுந்த புது சர்ச்சை..!
மேலும் பெண்கள் தங்கள் உடலை நினைத்து கவலை கொள்ளாமல் மீண்டெழ வேண்டுமென்றும் நமது உடல்கள் மாறலாம் அல்லது மாறாமல் இருக்கலாம், ஆனால் நமது ஆர்வம் மாறக்கூடாது என்றும் அதற்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கடின உழைப்புக்கு பின்னரே தன்னுடைய உடல் எடையை குறைத்து... காஜல் இந்தியன் 2படத்திற்கு தயாராகி வருவது தெரிகிறது. இவரது இந்த முயற்சிக்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.