இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் AK 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இந்த படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அஜித்தை வைத்து, 'நேர்கொண்ட பார்வை' மற்றும் 'வலிமை' ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் எச்.வினோத் மூன்றாவது முறையாக அஜித்தின் 61 ஆவது படமான 'துணிவு' படத்தை இயக்கி வருகிறார். இந்த மூன்று படங்களையும், பிரபல தயாரிப்பாளரும், ஸ்ரீ தேவியின் கணவருமான போனி கபூர் தான் தயாரிக்கிறார். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் ஏகே 61 படத்தில், அஜித்துக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார்.
மேலும் செய்திகள்: பிரமிப்பின் உச்சம்... 'பொன்னியின் செல்வன்' அரண்மனை முதல் அரியாசனம் வரை உருவான விதம்! BTS வீடியோ!
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சஞ்சய் தத் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. கடந்த மாதம், இந்த படத்தின்... படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்த நிலையில், இறுதி கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு, விரைவில் பாக்கங் செல்ல உள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில், நடிகர் அஜித்தும், மஞ்சு வாரியாருக்கு பாங்காங் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: முதல் முறையாக குழந்தை வீர் மற்றும் அப்பா ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து சௌந்தர்யா நெகிழ்ச்சி!
இந்நிலையில், ஏகே 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இந்த படத்தின் டைட்டில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், இந்த படத்திற்கு 'துணிவு' என்று, மாஸ் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அஜித் செம்ம ஹாய்யாக கையில் துப்பாக்கியுடன் படுத்திருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரில், No Guts No Glory என்கிற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது. மிகவும் வித்தியாசமாக பணத்தின் பிரதிபதிப்போடு இந்த போஸ்டர் வெளியாகியுள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது குறிபிடத்தக்கது.